நீதிமன்றத்தில் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.
- என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது.
நெல்லை மாவட்ட நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் பாதுகாப்பு பணியில் கவனக் குறைவாக இருந்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒரே ஒருநபர் மட்டும் குற்றவாளிகளை பிடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் என்ற செய்து கொண்டிருந்தனர்.
என்ன சம்பவத்திற்காக கொலை நடந்தது என்பதை விட கொலை நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது. நீதிமன்றம் முன்பு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி சொல்ல வருவார்கள்.
பணியில் இருக்கும் போலீசார் பணியை விட செல்போனில் மூழ்கி கிடப்பது வேதனையாக உள்ளது. கொலையாளியை பிடித்த சிறப்பு எஸ்ஐ உய்கொண்டானுக்கு நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.