உலகம்

அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடையாது- டிரம்ப்

Published On 2024-12-11 04:58 GMT   |   Update On 2024-12-11 04:58 GMT
  • 150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
  • டிரம்பின் முடிவால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்கிறார்.

இதற்கிடையே தனது 2-வது முறை ஆட்சியில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசியலமைப் பின் 14-வது திருத்தத்தின் படி, பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.


150 ஆண்டு கால சட்டத்தை மாற்றிமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேவேளை அதை செயல்படுத்துவது என்பது டிரம்புக்கு கடினமாக இருக்கும்.

ஏற்கனவே டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், இச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. அமெரிக்க குடிமகனாக மாறுவதற்கு கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

Tags:    

Similar News