உலகம்
null

பூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை திருப்பும் அணுக்கதிர்வீச்சு- விஞ்ஞானிகள் பரிசோதனை வெற்றி

Published On 2024-09-24 19:09 GMT   |   Update On 2024-09-24 19:16 GMT
  • சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது.
  • மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும்.

விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் தினமும் கடந்து செல்கின்றன. சில விண்கற்கள் பூமியில் விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்துள்ளது. அதே நேரம் இதில் மிகப்பெரிய விண்கற்கள் மட்டுமே பேசுபொருளாக இருக்கும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில் விண்ணில் இருந்து பறந்து வந்த விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது. இதனால், மக்கள் பீதியடைந்தனர். இச்சம்பவத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதேபோன்று அபாயம் மீண்டும் வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் மீது அணுக்கதிர்வீச்சை பாய்ச்சி அதனை திசை திருப்ப முடியும் என்பதை அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டியா தேசிய ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் நடத்திய பரிசோதனை நிரூபித்துள்ளது,


Full View


Tags:    

Similar News