அரசியலில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர்
- ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து விலகி, வணிக வாழ்க்கையை தொடர இருக்கிறார்.
- புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான பாதுகாப்புமிக்க செழிப்பான ஒரு நாடாக மாற்ற, நாட்டின் உயரிய நிலையில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி. அனைத்துலக பெருநிறுவத்துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், உலகளாவிய கார்ப்ரேட் துறையில் புதிய சவால்களை எடுப்பேன்" எனத் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலங்களின் போது, அமைச்சரவைக்கோ, பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்காமல், இரகசியமாக பல அமைச்சர்களின் பதவிகளில் தன்னை நியமித்துக் கொண்டவர் ஸ்காட் மோரிசன் என்பது குறிப்பிடதக்கது.