டாய்லெட் பிரேக் போகாம இருந்தா போனஸ் மதிப்பெண்.. குழந்தைகளை பாடாய் படுத்திய கறார் கணக்கு டீச்சர்!
- மதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது
- பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து குழந்தைகள் பாடத்தைக் கவனிக்கின்றனர்.
அமெரிக்காவில் சேர்ந்த கணக்கு ஆசிரியை மாணவர்கள் கழிவறை செல்ல இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க போனஸ் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்த சம்பவம் கண்டனத்தைக் குவித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த இந்த கொடுமை குறித்து அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் சமூக வளைத்ததில் பதிவிட்டதை அடுத்து இந்த விவகாரம் வைரலாகி வருகிறது.
மதிப்பெண்களைத் தேடி ஓடும் ரேசாக இந்தியா உட்பட உலகம் முழுமைக்கும் கல்வியானது தரம் தாழ்ந்து கிடக்கிறது. அந்த வகையில் சிறுவர்கள் மதிப்பெண்களே முக்கியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டதால் அந்தமதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது.
'எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒரு வினோதமான டாய்லட் பாலிசி வைத்திருக்கிறார். அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போக அவர் அனுமதிக்கிறார், அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தைக் கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர்அகாடெமிக் பாயிண்ட்ஸ் எனப்படும் குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்குகிறார்' என்று தனது சமுக வலைத்தள பதிவில் சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பிரின்சிபலுக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தனது மகள் தன்னிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு அவ்விஷயம் நார்மலைஸ் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரைவசி கருதி தனது மகளின் வயதையும் பள்ளி பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.