உலகம்

மருமகளை கிரேனில் வைத்து 7-வது மாடிக்கு அழைத்து சென்ற மாமியார்

Published On 2024-04-23 03:58 GMT   |   Update On 2024-04-23 03:58 GMT
  • மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார்.
  • புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

மாமியார்- மருமகள் இடையேயான உறவு பெரும்பாலான குடும்பங்களில் எப்போதும் சண்டையாகவே இருக்கும். விதிவிலக்காக சில குடும்பங்களில் மட்டுமே மருமகள் மீது மாமியார் அதிக அன்பு காட்டுவார்.

அந்த வகையில், சீனாவில் குழந்தை பெற்று வீடு திரும்பிய மருமகளை, லிப்ட் வசதி இல்லாததால் 7-வது மாடிக்கு அழைத்து செல்வதற்காக கிரேனை வாடகைக்கு எடுத்த மாமியாரின் செயல் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள சென்யாங் நகரை சேர்ந்தவர் வாங். இவரின் மருமகள் கர்ப்பம் அடைந்த நிலையில், சமீபத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. இதனால் வாங்கின் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மருமகள் குழந்தையுடன் வீடு திரும்பிய நிலையில், அவரை 7-வது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து செல்ல லிப்ட் வசதி இல்லாததால் வாங் கவலை அடைந்தார். இதைத்தொடர்ந்து வீட்டு உபயோக பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் ராட்சத கிரேனை வாடகைக்கு வரவழைத்து அதில் மருமகளையும், புதிதாக பிறந்த குழந்தையையும் பத்திரமாக ஏற்றி 7-வது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் மாமியாரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News