உலகம்

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை.. மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

Published On 2023-04-21 00:10 GMT   |   Update On 2023-04-21 00:10 GMT
  • மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது.
  • தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு வருகிற 26-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு வருகிற 26-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கராஜுவை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற இறுதிவரை போராட உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News