உலகம்

தலையணைக்கு அடியில் பதுங்கி இருந்த நாகப்பாம்பு- வீடியோ

Published On 2024-12-11 09:19 GMT   |   Update On 2024-12-11 09:19 GMT
  • கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
  • வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதிலும் நாகப்பாம்புகள் படமெடுத்து ஆடுவதை பார்க்கும் போது மிகவும் பயமாக இருக்கும். இந்நிலையில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டெல்லென்போஷ் நகரில் வசிக்கும் ஒருவரது வீட்டில் படுக்கை அறையில் இருந்து சத்தம் வந்தது. இதனால் குடும்பத்தினர் படுக்கை அறை முழுவதும் சோதனை நடத்திய போது, அங்கு தலையணைக்குள் இருந்து சத்தம் அதிகமாக கேட்டது. அப்போது தலையணைக்கு அடியில் விஷப்பாம்பு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வன ஆர்வலருக்கு தகவல் தெரிவித்ததும் அவர் அங்கு விரைந்து வந்தார். பின்னர் தலையணையை தூக்கி அதன் அடியில் மறைந்திருந்த விஷ நாகப்பாம்பை திறமையாக அகற்றினார். அந்த விஷப்பாம்பு அடர்கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு, மஞ்சள் கலந்து காணப்பட்டது. கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பாம்புகள் தென் ஆப்ரிக்கா வனப்பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

இந்நிலையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த அந்த பாம்பை வன ஆர்வலர் அப்புறப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



Tags:    

Similar News