துருக்கி அதிபர் தேர்தலில் இன்று மீண்டும் வாக்குப்பதிவு- எர்டோகன் வெற்றி பெறுவாரா?
- துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
- எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார்.
அங்காரா:
துருக்கியில் கடந்த 15-ந்தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.
துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28-ந்தேதி (இன்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி இன்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு 20 ஆண்டுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் எர்டோகனுக்கு கடும் சவால் அளித்து வருகிறார்.
2003 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த எர்டோகன், அப்ப தவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமான அதிபர் பதவியை கொண்டு வந்தார். அவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.