உலகம்

குடிப்பழக்கத்தை கைவிட்ட தென் கொரியவாசிகள்.. மொடா குடிகாரர்களையும் முற்றிலும் மாற்றியது எது?

Published On 2024-12-11 06:14 GMT   |   Update On 2024-12-11 06:14 GMT
  • இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் மக்ஜியோல்லி [அரிசி மது] குடித்து மகிழ்வார்கள்
  • மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம்.

தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது.

முந்தைய காலங்களில் இரவு பப்-கள், மதுபான விடுதிகளுக்குப் போவதும் வருவதுமாக நள்ளிரவிலும் ஜன நெருக்கடி நிறைந்த இடங்களும் சாலைகளும் தற்போது வெறிச்சோடி கிடப்பதை பார்க்க முடிகிறது.

குறிப்பாக தலைநகர் சியோலில் முன்பைப் போலல்லாது இரவில் வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள் இதை உறுதிப் படுத்துகிறது. மக்களுக்கு குடியின் ஆர்வம் குறைந்துவருவதை பல்வேறு புள்ளிவிவரங்களும் தெளிவுபடுத்துகிறது.

 

 

சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில்,  சியோலின் ஒரு காலத்தில் துடிப்பான நோக்டு தெருவில் மக்கள் வேலையை முடித்து வந்து இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் உள்ள விடுதிகளும் மக்ஜியோல்லி [அரிசி மது] உள்ளிட்ட மது வகைகள் இல்லாமல் தங்கள் நாளை முடிக்க மாட்டார்கள்.

  

பாப் - பப் விடுதிகள் நிரம்பி வழியும். மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம். ஆனால் இப்போது அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. அந்த நிலைமை முழுவதும் மாறிவிட்டது என்று கூறுகிறார்.

மக்கள் மதுவைக் கைவிடுவதற்கு முக்கிய காரணம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள நீண்டகால பணவீக்கம் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

 

கடன் நிறுவனங்கள் அருகி இருக்கும் தென் கொரியாவில் பெரும்பான்மையோர் கடனாளிகளாக மாறியிருப்பதும் வட்டி விகிதங்கள் அதிகரித்தன் காரணமாகவும் மக்கள் தங்கள் பணப் பையைத் திறந்து செலவு செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.   

Tags:    

Similar News