புதுச்சேரி

கோப்பு படம்.

மே 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிக்கை

Published On 2023-03-29 09:16 GMT   |   Update On 2023-03-29 09:16 GMT
  • புதுவை அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
  • இனிப்புப்பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது:-

புதுவை அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தூக்கு கூபைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள், விரிப்பான்கள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல் தட்டுகள், உணவுப் பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம், தெர்மாக்கோல் அலங்காரப்பொருட்கள், பிளாஸ்டிக் முட்கரண்டி, சிறிய பேக்கேஜிங் போர்த்திய தாள்கள், இனிப்புப்பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

ஆகையால் புதுவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு சட்டப்பேரவை அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 14 வகையான பொருட்களை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் மே 1-ந் தேதி முதல் பயன்படுத்தக்கூடாது. எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News