முற்றுகை, மறியல் போராட்டம் நடத்த கூடாது
- ஒப்பந்த நர்சுகள் கொரோனா பரவல் குறைந்தவுடன் நீக்கப்பட்டனர்.
- நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
புதுச்சேரி:
அரசு மருத்துவ மனைகளில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த நர்சுகள் கொரோனா பரவல் குறைந்தவுடன் நீக்கப்பட்டனர். பின்னர், 3 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் சுகாதாரத்துறை 105 நர்சு பணியிடங்களை நிரப்ப வெளியிட்ட அறிவிப்பில் ஒப்பந்த நர்சுகளுக்கு முன்னு ரிமை வழங்கவில்லை.
இதில் முன்னுரிமை வழங்க கோரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை 2 நாட்கள் முற்றுகையிட்ட ஒப்பந்த நர்சுகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி அளித்த உறுதியை ஏற்று போரா ட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க எதிர்கட்சி தலைவர் சிவா, அ.தி.மு.க. மாநில செய்லாளர் அன்பழகன் ஆகியோர் ஒப்பந்த நர்சுகளை அழைத்து சென்றனர்.அப்போது முதல் அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய முடியாது என மத்திய அரசே கூறிவிட்டது. செவிலியர் பணி நியமனத்தில் சலுகை வழங்க முடியாது என விதிகளை காட்டி அதிகாரிகள் மறுக்கின்றனர். தன்னால் முடிந்த வரை முயற்சித்து விட்டேன்.இருப்பினும் ஒப்பந்த பணியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய கோப்பு தயாரித்து கவர்னருக்கு அனுப்பி உள்ளேன். கவர்னர் அனுமதி கிடைத்த பிறகு சம்பளம் உயர்த்தப்படும். இனி அதிகாரி களின் அலுவல கத்தை முற்றுகையிடுவது, மறியல் செய்யக் கூடாது என அறிவுறுத்தினார்.
இதனையடுத்து முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒப்பந்த நர்சுகள் புறப்பட்டனர்.