- பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- கல்லூரி திறந்த வெளி புல்வெளி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.கல்லூரி திறந்த வெளி புல்வெளி அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு பிம்ஸ் மருத்துவ கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார்.
அருட்தந்தை ஜோபி ஜார்ஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் பீட்டர் மனோகரன் பங்கேற்று பேசினர்.
பின்னர் மாணவ- மாணவிகளின் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன.
இதனை தொடர்ந்து நடந்த மாணவ-மாணவிகள் நடனம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் காந்தி குறித்த ஆவண படம் அகன்ற திரையில் பின்னணி இசையுடன் காண்பிக்கப்பட்டது.
விழாவில் துணை முதல்வர் மேகி முருகன், செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவ மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடு களை மருத்துவமனை வளாக பாதுகாப்பு மற்றும்மேம்பாட்டு நிர்வாகி டாக்டர் பிரசன்னாராஜு மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.