null
தங்கம் வென்ற வீரருக்கு தலைமை நீதிபதி பாராட்டு
- தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
- தலைமை நீதிபதியும் ஒரு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது
புதுச்சேரி:
புதுவை தீயணைப்பு துறையில் டிரைவராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவரின் மனைவி சுந்தரி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களின் மகன் விஷால், மன வளர்ச்சி குன்றியவர். இருப்பினும் நயினார்மண்ட பத்தில் வலு தூக்கும் பயிற்சி பெற்று வந்தார்.
உள்ளூரில் பல போட்டிகள் பரிசு பெற்ற இவர் ஜெர்மனியில் நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
இதில் 4 வெள்ளி பதக்கம் பெற்றார். கடந்த 11-ந் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் வலுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். மேலும் இரும்பு மனிதன் என்ற பட்டத்தையும் பெற்றார்.
இவரை பிரதமர் மோடி பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். புதுவை திரும்பிய விஷாலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கேள்விப்பட்ட புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், விஷாலையும், பயிற்சியாளர் பாக்யராஜையும் தனது அறைக்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தலைமை நீதிபதியும் ஒரு விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது