புதுச்சேரி

கோப்பு படம்.

மின்துறை இழப்பை ஈடுகட்ட மின்கட்டணம் உயர்வு

Published On 2023-10-28 06:14 GMT   |   Update On 2023-10-28 06:14 GMT
  • முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கண்டனம்
  • சமீபத்தில் நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழலால் ரூ.12 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மின் கட்டண உயர்வு மூலம் ஏழை, நடுத்தர மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் புதுவை மின்துறை இறங்கியுள்ளது.

அதானி சமீபத்தில் நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழலால் ரூ.12 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக விலை கொடுத்து நிலக்கரியை அதானியிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் புதுவை மின்துறைக்கும் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை சரிக்கட்ட புதுவை மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்.

இந்த ஊழல் பண இழப்பை புதுவை மக்களிடம் வசூலிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியாளர்கள் இதை பற்றி கவலைப்படாமல் மதுக்கடைகளை திறப்பதிலேயே குறியாக உள்ளனர்.

இந்த மின்கட்டண வசூலை உடனே நிறுத்த வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மக்களுக்கு இழைக்கும் துரோகம். இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News