புதுச்சேரி
தொடர் மின் வெட்டை போக்க கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
- உப்பளம் தொகுதிக்குட் பட்ட உடையார் தோட்டம் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருகிறது.
- அடிக்கடி அங்குள்ள வீட்டு மின் சாதன பொருட்கள் பழுதாகிறது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட் பட்ட உடையார் தோட்டம் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி அங்குள்ள வீட்டு மின் சாதன பொருட்கள் பழுதாகிறது.
இது பற்றி அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. மரப்பாலம் மின்துறை உதவி பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ் மற்றும் இளநிலை பொறியாளர் செல்வ முத்தையன் ஆகியோரை சந்தித்து இது சம்பந்தமாக எடுத்துரைத்தார்.
இதை தொடந்து மின் துறை அதிகாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று இக்குறைகளை உடனடியாக சரி செய்வதாக உறுதியளித்தனர். இந்த சந்திப்பின் போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.