புதுச்சேரி

சத்தியமூர்த்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பலி

Published On 2023-07-10 07:26 GMT   |   Update On 2023-07-10 07:26 GMT
  • சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி உயிரிழந்தார். அவரது மனைவி வனிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
  • மாட்டின் மீது ேமாதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பைபாஸ் சாலையின் தடுப்பு கட்டையில் ஏறி இறங்கியது.

புதுச்சேரி:

புதுவை சேதராப்பட்டு பழைய காலனியைச் சேர்ந்த வர் சத்தியமூர்த்தி (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும் இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்ததாரராகவும் இருந்து வந்தார்.

இவரது மனைவி வனிதா. இவர்கள் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஜவகர் நகரில் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு தம்பதியி னர் காரில் புதுச்சேரிக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு திருச்சிற்றம் பலம் கூட்ரோடுக்கு வந்து கொண்டிருந்தனர்.

பட்டானூர் டோல்கேட் அருகே சென்ற போது திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் பஸ் வந்தது. அப்போ ஒரு மாடு சாலை யின் குறுக்கே சென்றது. மாட்டின் மீது ேமாதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பைபாஸ் சாலையின் தடுப்பு கட்டையில் ஏறி இறங்கியது.

மேலும் சத்தியமூர்த்தி ஓட்டி வந்த கார் மீது பஸ் வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த சத்தியமூர்த்தி அவரது மனைவி வனிதா இருவரும் இடுபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசனின் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து இருவரையும் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

 சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி உயிரிழந்தார். அவரது மனைவி வனிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதற்கிடையே பஸ் ேமாதியதில் சாலையின் குறுக்கே சென்ற மாடும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News