புதுச்சேரி

கோப்பு படம்.

சாலையோர வியாபாரி குழு தேர்தலில் குளறுபடி

Published On 2023-10-27 08:28 GMT   |   Update On 2023-10-27 08:28 GMT
  • ஏ.ஐ.டி.யூ.சி. கண்டனம்
  • தன்னிச்சையாக தேர்தலை அறிவித்துவிட்டு, தேர்தலை ரத்து செய்வது கண்டனத்துக்குரியதாகும்.

புதுச்சேரி:

ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர சாலையோர வியாபாரக் குழு தேர்தலை நடத்த நகராட்சி நிர்வாகம் 2-வது முறையாக அறிவித்துள்ளது இதற்கு முன் 21.7.2023 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவில்லை. நகராட்சி ஆணையரும் நகராட்சி நிர்வாகமும் இப்பொழுதுள்ள வெண்டிங் கமிட்டி கூட்டத்தை கூட்டி தேர்தல் நடத்த ஆலோசனை நடத்தவில்லை.

தன்னிச்சையாக தேர்தலை அறிவித்துவிட்டு, தேர்தலை ரத்து செய்வது கண்டனத்துக்குரியதாகும்,

தேர்தல் தேதி முடிவு செய்வதற்கு முன்பு எதிர்வரும் பண்டிகை காலங்கள் போன்றவற்றை முன்கூட்டியே சிந்தித்து இருக்க வேண்டும். இந்த தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் இல்லாமல் ஆணையர் பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறார்.

எனவே உடனடியாக ஆணையரை மாற்றி, புதிய ஆணையரை நியமித்து, தற்பொழுது உள்ள வெண்டிங் கமிட்டியை கூட்டி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்

இவ்வாறு சேதுசெல்வம் அறிக்கை யில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News