கணினி

29 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் நத்திங் இயர் (ஸ்டிக்) அறிமுகம்

Published On 2022-10-27 05:09 GMT   |   Update On 2022-10-27 05:09 GMT
  • நத்திங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது இயர்போன் உருளை வடிவம் கொண்டு இருக்கிறது.
  • புதிய நத்திங் இயர்போன் உதட்டு சாயத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. நத்திங் இயர் (ஸ்டிக்) என அழைக்கப்படும் புது இயர்போன் ஹால்-இன்-இயர் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் 12.6mm டிரைவர்கள் உள்ளன. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது இந்த இயர்போன் மொத்தத்தில் 29 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

இந்த இயர்போனின் உருளை வடிவம் உதட்டு சாயம் (லிப்ஸ்டிக்) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போனில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. எனினும், இதில் உள்ள மூன்று மைக்ரோபோன்கள் அதிக தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்த பிளே, பாஸ், ஸ்கிப், வாய்ஸ் அசிஸ்டன்ஸ் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் உள்ளிட்ட ஆப்ஷ்ன்களை இயக்க பட்ஸ்-இல் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

புது இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 29 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் எளிதில் இணைந்து கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. நத்திங் போன் (1) மாடலுடன் இணைக்கும் போது இந்த இயர்பட்ஸ் பிரத்யேக அம்சங்களை பெறுகிறது.

இவற்றில் கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், EQ செட்டிங் அட்ஜஸ்ட்மெண்ட், ஃபைண்ட் மை இயர்பட்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த அம்சங்களை நத்திங் போன் (1) மாடலின் குயிக் செட்டிங்ஸ்-இல் இயக்க முடியும். இந்தியாவில் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) விலை ரூ. 8 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நவம்பர் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் மிந்த்ரா வலைதளங்களில் துவங்குகிறது.

Tags:    

Similar News