விரைவில் இந்தியா வரும் டெக்னோ ப்ளிப் போன்.. இணையத்தில் லீக் ஆன புது தகவல்..!
- டெக்னோ ப்ளிப் போன் மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
- டெக்னோ பேன்டம் V ப்ளிப் மாடலில் 64MP டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.
டெக்னோ நிறுவனம் தனது போவா 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை சமீபத்தில் வெளியிட்டது. விரைவில், இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்களில் FHD+ LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் பிரத்யேக எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றன.
போவா 5 சீரிஸ் மட்டுமின்றி டெக்னோ பிரான்டு இந்திய சந்தையில் பேன்டம் V ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ப்ளிப் போன் வெளியீடு பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல டிப்ஸ்டர் பரஸ் குக்லானி டெக்னோ பேன்டம் V ப்ளிப் மாடல் இந்திய சந்தையில் 2023 மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இதுதவிர புதிய ப்ளிப் போன் பற்றி வேறு எந்த தகவலையும் அவர் வழங்கவில்லை.
டெக்னோ பேன்டம் V ப்ளிப் அம்சங்கள்:
புதிய டெக்னோ பேன்டம் V ப்ளிப் மாடலில் 6.75 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே, Full HD+ 2640x1080 பிக்சல் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், பன்ச் ஹோல் 32MP செல்ஃபி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13 வழங்கப்படுகிறது.