6000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அறிமுகம்
- இதில் 12 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இதில் 70 வாட் அல்ட்ரா சார்ஜ் வசதி உள்ளது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் 5FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 12 ஜி.பி. விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹை ஒ.எஸ். 14, 108MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது லென்ஸ், ஏ.ஐ. லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 70 வாட் அல்ட்ரா சார்ஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி அம்சங்கள்:
6.78 இன்ச் 2436x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
8 ஜி.பி., 12 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹை ஒ.எஸ். 14
டூயல் சிம் ஸ்லாட்
108MP பிரைமரி கேமரா
2MP லென்ஸ், ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. டைப் சி
6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
70 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ரிவர்ஸ் சார்ஜிங்
டெக்னோ போவா 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொமெட் கிரீன் மற்றும் மீடியோரைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான் வலைதளத்தில் துவங்குகிறது.