நத்திங் ஃபோல்டபில் போன் - சிஇஒ என்ன சொன்னார் தெரியுமா?
- நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியாகுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
- நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சாம்சங், ஒப்போ, மோட்டோரோலா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன.
இந்த நிலையில், நத்திங் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமா என்ற கேள்விக்கு, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் பதில் அளித்துள்ளார்.
அதன்படி நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் தற்போதைக்கு அறிமுகமாகாது என நத்திங் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கார்ல் பெய் கூறும் போது,
"இப்போதைக்கு வாய்ப்பில்லை. தற்போது யாரும் வந்து, எனது போனில் மடிக்கக்கூடிய வசதி வேண்டும் என்று கூறுவதில்லை. உற்பத்தியாளர்கள் பயனர்களிடம் புகுத்த நினைக்கும் கண்டுபிடிப்பகாவே, நான் அவற்றை பார்க்கின்றேன்," என்று தெரிவித்தார்.
சில நிறுவனங்கள் இதனை உற்பத்தி செய்து வருகின்றன. கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருப்பதை கார்ல் பெய் எடுத்துரைத்து இருக்கிறார்.