டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: 2வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இன்று நடந்த 2வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, ரஷிய வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் ரூப்லெவ் 7-6 (7-3), 6-1 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் கரன் கச்சனாவ், பிரேசில் வீரர் தியாகோ செய்போத்துடன் மோதினார். இதில் தியாகோ 6-1, 7-5 என்ற செட்களில் கச்சனாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.