search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல அமெரிக்க பாடகி செலீனா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம்
    X

    பிரபல அமெரிக்க பாடகி செலீனா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம்

    • செலீனா கோம்ஸ்-ஐ இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
    • தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று செலீனா கோம்ஸ் தெரிவித்திருந்தார்.

    பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான செலினா கோம்ஸ்-க்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

    தனது காதலர் பென்னி பிளாங்கோவை செலினா கோம்ஸ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். இதனையொட்டி இருவரும் மோதிரம் மாற்றி கொண்டு நிச்சயம் செய்துள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செலினா கோம்ஸ் வெளியிட்டுள்ளார்.

    32 வயதான செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் 400 மில்லியன் பாலோயர்ஸைக் கொண்ட முதல் பெண் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதுவரை அவரை இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

    "தனக்கு உடல்நலப் பிரச்னைகள் இருப்பதாகவும், அதனால் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தற்போது வாடகைத் தாய் மற்றும் குழந்தை தத்தெடுப்பு போன்றவை இருப்பதால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று செலினா கோம்ஸ் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×