என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
பராரி திரைப்படத்தை பாராட்டிய வி.சி.க தலைவர் திருமாவளவன்
- முன்னணி கதாப்பாத்திரத்தில் ஹரிசங்கர் மற்றும் சங்கீதா கல்யாண் நடித்துள்ளனர்.
- பராரி திரைப்படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக ஜோக்கர் மற்றும் குக்கூ திரைப்படங்கள் பார்க்கப்படுகிறது. இப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் தற்பொழுது பராரி என்ற திரைப்படத்தை வழங்கியுள்ளார்.
பராரி திரைப்படத்தை எழில் பெரியவேடி இயக்கியுள்ளார். இவர் ராஜு முருகனின் உதவி இயக்குனராக இருந்தவராவார். இப்படத்தில் பெரும்பாலானோர் புதிய முக நடிகர்களாக அறிமுகமாகவுள்ளனர். படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் ஹரிசங்கர் மற்றும் சங்கீதா கல்யாண் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
உமா தேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சாம் மேற்கொண்டுள்ளார்.
மொழி, ஜாதி, கலப்பு திருமணம் ஆகியவற்றை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பராரி திரைப்படத்தை பார்த்த வி.சி.க தலைவரான திருமாவளவன் படத்தை பாராட்டியுள்ளார். அவரி கூறியதாவது " இன வெறியையும் ஜாதி வெறியையும் தூண்டும் அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். உழைக்கிற மக்கள் இயல்பாகவே வாழவேண்டும். இதை மிகவும் பொறுப்புணர்வோடு இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். எழில் பெரியவேடி எடுத்த இந்த முயற்சிக்கு பாராட்டுகள். இத்திரைப்படத்தை அனைவரும் வந்து பார்க்க வேண்டும் . இது மாதிரியான படங்களை வெகு ஜனங்களுக்கு சென்று சேர்க்க வேண்டும்" .
இன வாதம், சாதிய வாதம் உழைக்கும் மக்களுக்கு தேவையற்றது,உழைக்கிற மக்கள் இயல்பாக வாழ வேண்டும் என்று இந்த படம் சொல்லி இருக்கிறது✊?Thank you? Thol. @thirumaofficial, #VCK Leader for watching and appreciating #Parari??pic.twitter.com/b3YoEPeB5Z
— Ramesh Bala (@rameshlaus) November 23, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்