என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிசுகிசு
தமிழ், மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆட மறுத்து விட்டாராம்.
கதாநாயகிகள் பலரும் படவாய்ப்பு இல்லாத போது குத்தாட்ட பாடலுக்கு நடனமாடுவது வழக்கமாக வைத்து இருக்கிறார்களாம். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் பிரபல நடிகை ஆடிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதாம். நடிகைகள் ஆடும் குத்தாட்டதை விரும்பி பார்க்க தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறதாம்.
இயக்குனர்கள் பலரும் முன்னணி நடிகைகளை தொடர்பு கொண்டு ஒரு பாடலுக்கு எங்கள் படத்தில் குத்தாட்டம் வேண்டும் என்று கேட்கிறார்களாம். அப்படி நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தற்போது தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவரிடம் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட அணுகி இருக்கிறார்களாம்.
அதற்கு நடிகை, எனக்கு நடனம் ஆட தெரியும் என்பதற்காக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட சொல்லி கேட்கிறார்கள். நான் நடிக்கும் படத்தில் கூட கதைக்கு தேவை இருந்தால் மட்டுமே பாடல் காட்சியில் நடனம் ஆடுவேன் என்று சொல்லி விட்டாராம்.
முன்னணி நடிகையாக இருப்பவர், நடிப்பதை விட வியாபாரத்தில் அதிக ஈடுபாடு காண்பித்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம். இவர் தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறாராம். நடிப்பில் சம்பாதித்த பணத்தை புதிய படங்களை தயாரிப்பது மற்றும் வாங்கி வெளியிடுவது என்று முதலீடு செய்து வருகிறாராம்.
இந்த முதலீட்டால் நடிகைக்கு நல்ல வருமானம் கிடைத்து இருக்கிறதாம். இதனால், இந்த வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்து இருக்கிறாராம்.
தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை, முன்னணி நடிகர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர், தமிழில் தேசிய விருது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்தாராம். அந்த படம் அசுர வெற்றி பெற்றதால், நடிகைக்கு நல்ல பெயர் கிடைத்ததாம். இதையடுத்து நடிகைக்கு தமிழ் மொழியில் நடிக்க ஆசை வந்து விட்டதாம்.
இதனால், முன்னணி நடிகர்களுக்கு போன் செய்து பட வாய்ப்பு கேட்டு வருகிறாராம். மேலும் ஏற்கனவே நடிகரை அணுகி, மீண்டும் உங்களுடன் ஒரு படத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாராம். ஆனால், நடிகைக்கோ இதுவரை எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம்.
முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை, தான் இழந்த பட வாய்ப்பை பிடிக்க போராடி வருகிறாராம்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டாராம். அதன்பின் ஓய்வு எடுத்ததில் உடல் எடை கூடி குண்டாக மாறினாராம். இதனால் பட வாய்ப்புகளை இழந்தாராம். இழந்த பட வாய்ப்புகளை பிடிக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினாராம்.
அந்த முயற்சி ஓரளவிற்கு கைக்கொடுத்தாலும், பட வாய்ப்புகளை பிடிக்க முடியவில்லையாம். இழந்த பட வாய்ப்புகளை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தூது அனுப்ப முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.
கிராமத்து பின்னணி கொண்ட கதைகளில் நடித்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் திடீர் முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் சங்க நடிகருடன் ரிப்பன் கட்டி வந்த நடிகைக்கு, தொடர்ந்து கிராமத்து பின்னணி கொண்ட கதைகள் தேடி வந்ததாம். நடிகையும் ஒப்புக்கொண்டு நடித்து வந்தாராம். தான் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதால், திடீரென்று சம்பளத்தை உயர்த்தினாராம்.
நடிகை சம்பளத்தை உயர்த்திய நேரம், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டதாம். இதனால் ஓரிரு படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்தாராம். தற்போது பல இளம் நடிகைகள் குறைந்த சம்பளத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகையும் தனது சம்பளத்தை குறைக்க முடிவு செய்து இருக்கிறாராம். இனிமேலாவது நடிகைக்கு படவாய்ப்புகள் வருகிறதா என்று பொருத்து இருந்துதான் பார்க்கணும்...
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர், இயக்குனர்களுக்கு நிபந்தனை போடுகிறாராம்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர், தமிழில் சிங்கத்துடன் ஆடி பாடி பிரபலமானாராம். அதன்பின் தமிழில் பல பட வாய்ப்புகள் நடிகைக்கு தேடி வர ஆரம்பித்ததாம். நடிகையும் கதை கேட்டு தனக்கு ஏற்றமாதிரி இல்லை என்று பல படங்களை நிராகத்து விட்டாராம்.
தற்போது நடிகையை தேடி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வருகிறதாம். இதற்கு நடிகை உடல் எடை குறைக்கவோ, ஏற்றவோ மாட்டேன், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று இயக்குனர்களுக்கு பல நிபந்தனைகள் போடுகிறாராம்.
பிரபல நடிகையாக இருப்பவர் வயதானாலும், இன்னும் கதாநாயகி வேடம் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறாராம்.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக 20 வருடங்களாக நடித்து வரும் பிரபல நடிகை ஒருவர், சமீபத்தில் தனது திரைப்பயணத்தை கொண்டாடினாராம். நடிகை இன்னும் இளமை தோற்றத்தில் இருப்பதால் கதாநாயகி வேடத்திலேயே தொடர்ந்து நடித்து வருகிறாராம்.
இந்நிலையில், நடிகையிடம் ஒரு படக்குழுவினர் இரண்டாவது நாயகியாக நடிக்க வேண்டும் என்று அழைத்தார்களாம். ஆனால், நடிகையோ நடித்தால் கதாநாயகி மட்டும் தான், இரண்டாவது நாயகி, கௌரவ தோற்றம் ஆகிய வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
சர்ச்சை நடிகர் என்று பெயர் பெற்றவர், தனது மனதை மாற்றி இருப்பது பலரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்து நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சில ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி இருந்தாராம். படப்பிடிப்பு செல்லாமல் தனது நாட்களை கழித்து வந்த நடிகர், பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் வெற்றி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டாராம்.
ஒருவழியாக ஒரு படத்தில் நடித்து வெற்றி பெற்றிருக்கும் நடிகர், இனிமேல் தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக பாதி தொகை மட்டும் வாங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதுவரை அதிக சம்பளம், வீட்டிற்கு தனி, எனக்கு தனி சம்பளம் என்று வாங்கி வந்த நடிகரின் இந்த மன மாற்றத்தை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்களாம்.
இளம் நடிகர் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை நீக்க மிகவும் போராடி வருகிறாராம்.
சின்னத்திரையில் இருந்து தற்போது பெரியத்திரைக்கு வந்திருக்கும் இளம் நடிகர் ஒருவர், தன்னுடைய பட விழாவின் போது இயக்குனர்கள் பற்றி பேசியது சர்ச்சையானதாம். இயக்குனர்கள் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களே அவர் மீது கோபத்தில் இருக்கிறார்களாம்.
இதனால், தன்னுடைய இமேஜை மாற்ற தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து, எனக்கு ஆதரவாக பேசுங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் என்று கேட்டு வந்தாராம். யாரும் அவருக்காக குரல் கொடுக்கவில்லையாம். தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்க பலரிடம் ஆலோசனை கேட்டு போராடி வருகிறாராம்.
இளம் நடிகர் ஒருவர் தனக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பேச ஆள் தேடி வருகிறாராம்.
சின்னத்திரையில் இருந்து தற்போது பெரியத்திரைக்கு வந்திருக்கும் இளம் நடிகர் ஒருவர், தன்னுடைய பட விழாவின் போது இயக்குனர்கள் பற்றி பேசியது சர்ச்சையானதாம். இயக்குனர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்களாம்.
இதனால், தன்னுடைய இமேஜை மாற்ற தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து, எனக்கு ஆதரவாக பேசுங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் என்று கேட்டு வருகிறார்களாம். ஆனால், நண்பர்களோ அவரைப் பற்றி தற்போது பேசினால், தனக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்களாம்.
இளம் நடிகர் ஒருவர் ஒரு பட விழாவில் பேசியது இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஒன்று இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகர், சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்க சீரியலில் நடித்து வந்தாராம். அதன்பின் ஒரு ஷோவில் நடிகர் கலந்துக் கொள்ள மிகவும் பிரபலமாகி விட்டாராம்.
தற்போது நடிகருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து விட்டதாம். தற்போது இவர் நடித்துள்ள படத்தின் விழாவில் பேசும்போது, இளம் இயக்குனர்களை பற்றி பேசிவிட்டாராம். இது உதவி இயக்குனர்கள், மற்ற இயக்குனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாகி இருக்கிறதாம். ஏற்கனவே நடிகர் ஓவர் பந்தா காட்டுவதாக பேச்சு வரும் நிலையில், தற்போது நடிகரின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர், பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க தயக்கம் காண்பித்து வருகிறாராம்.
முன்னணி நடிகர் ஒருவர் தன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தாராம். அப்போது எதிர்பாராத விபத்து, இயக்குனர் தயாரிப்பாளர் பிரச்சனை என்று அந்த படம் கிடப்பில் போடப்பட்டதாம். தற்போது ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்களாம்.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்து வந்த நடிகை சில காரணங்களால் விலக, வீரமான நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஆனால், நடிகையோ நடிகருடன் நடிக்க தயக்கம் காண்பித்து வருகிறாராம்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X