search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    தமிழில் சமீபத்தில் அறிமுகமான நடிகை ஒருவர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு கட்டளையிட்டு வருகிறாராம்.
    மலையாளத்தில் இருந்து வந்த நடிகை, தன்னுடைய முதல் படத்திலேயே பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து மிகவும் பிரபலமானாராம். இதன்பின் நடிகையின் வளர்ச்சி பிரகாஷமாக மாறி இருக்கிறதாம். பல படங்கள் நடிகையை தேடி வருகிறதாம்.

    நடிகையோ மகிழ்ச்சியாக கதை கேட்டு வருகிறாராம். இருப்பினும் தான் நடித்த ஒல்லி நடிகருடன் மீண்டும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் அவரை வைத்து படம் எடுத்து, மீண்டும் அவருடன் என்னை நடிக்க வையுங்கள் என்று கட்டளையிட்டு வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், படத்தை விரைவில் முடிக்க ஆவலாக காத்திருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, முன்னணி கதாநாயகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனாராம். பிரம்மாண்டமாக உருவாகி வந்த இந்த படம் திடீர் என்று நின்று போனதாம். அதன்பின் கொரோனா ஊரடங்கு என்று படம் பாதியிலேயே நிற்கிறதாம். 

    இதற்கிடையில் நடிகை திருமணமும் செய்துக் கொண்டாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாமல் மற்ற படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் தள்ளி போட்டிருக்கிறாராம். இதனால் எப்போது இந்த படம் முடியும் என்று ஆவலாக காத்திருக்கிறாராம் நடிகை.
    பிரபல நடிகையாக இருப்பவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால், அதை நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து வருகிறாராம்.
    தமிழில் நடித்து பிரபலமான நடிகைகள், தெலுங்கு சினிமாவில் நுழைந்து அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்து வருகிறார்களாம். ஆனால், அந்த வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. தற்போது ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தும் பட வாய்ப்பை மறுத்து இருக்கிறாராம்.

    மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நடிகை தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறாராம். இந்தநிலையில் நடிகைக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்ததாம். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நடிகை.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்நிலையில், இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நடிகையை அணுகி இருக்கிறார்களாம்.

    கதையை கேட்ட நடிகை, ரூ.4 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இறுதியாக ரூ.3 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம். முந்தைய படங்களில் நடிகை ரூ.2 கோடிதான் வாங்கி வந்தாராம். 
    சில படங்களில் நடித்து வரும் நடிகர் ஒருவர், இயக்குனர் ஒருவரின் பேச்சை கேட்டு மற்றவர்களிடம் கெட்ட எடுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை படத்தில் நடித்த நடிகர் தற்போது மருத்துவரான படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டாராம். இவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்களாம். இவரை தொடர்பு கொண்டு படத்தை பற்றி பேசுங்கள் என்று கேட்டால், சொல்ல மறுக்கிறாராம்.

    இயக்குனர் ஒருவர் யாரிடையும் படத்தை பற்றி பேச கூடாது என்று கட்டளை போட்டு இருக்கிறாராம். இயக்குனரின் செயலால் தற்போது நடிகருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறதாம். 
    சின்னத்திரையில் பிரபலமாக இருப்பவர் தற்போது படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
    சின்னத்திரையில் பாட்டுபாடி பிரபலமானவர், சில ஷோக்களில் கலந்துக் கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தாராம். வெகுளியான பெண் என்று பலரும் கூறி வரும் நிலையில், அவரை தொடர்புக் கொண்ட சிலர், எங்கள் கடையை திறக்க வேண்டும், விளம்பரம் செய்ய வேண்டும் என்று கேட்டால், லட்சக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.

    மேலும், படங்களில் நடிக்க அழைத்தால், பெரிய ஹீரோக்கள் படம் என்றால் தான் கதை கேட்பேன், ஹிட் இயக்குனர்கள் படம் தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடுகிறாராம். ஏன் இப்படி எல்லாம் என்று கேட்டால், நான் ரொம்ப பிரபலம் அப்படித்தான் இருப்பேன் என்று ஓவர் பில்டப் கொடுக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை, நடிகரை சிபாரிசு செய்ய சொல்லி புலம்ப வைத்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர், தன்னுடன் நடித்த நடிகைகளை மற்ற படங்களில் தன்னுடன் நடிக்க சிபாரிசு செய்து வருகிறாராம். இதில் ஒரு நடிகைக்கு மட்டும் 5க்கும் மேற்பட்ட படங்களில் சிபாரிசு செய்து அவருடன் இணைந்து நடித்துவிட்டாராம்.

    முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்தும், நடிகைக்கு மற்ற பட வாய்ப்புகள் வரவில்லையாம். இதனால், அடுத்த படத்திலும் முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு அவரிடம் கேட்டு இருக்கிறாராம். மீண்டுமா என்று ஷாக் ஆகி, புதிய படத்தில் நடிகைக்கு சிபாரிசு செய்து இருக்கிறாராம். ஆனால் படக்குழுவினர் நடிகை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களாம். இதனால் நடிகர், நடிகைக்கு சிபாரிசு செய்து வெறுத்துவிடுவேன் போல என்று புலம்பி வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, பட வாய்ப்பு இல்லாததால் தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்காமல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம். இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால், பட வாய்ப்பை இழந்து வருகிறாராம்.

    நல்ல படம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து, எதுவும் நடக்க வில்லையாம். இதனால், மனதை மாற்றிக் கொண்டு, வெப் தொடரில் நடிக்க சம்மதித்து இருக்கிறாராம். பல வெப் தொடர்களை தவிர்த்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்பு இல்லாததால் மனதை மாற்றி இருக்கிறாராம்.
    கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர், திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறாராம்.
    தமிழில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர், தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். அதே சமயம், வயது அதிகமாகி வருவதால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நடிகையை திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்களாம்.

    ஆனால், நடிகையோ திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகிறாராம். நடிகை நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதாம். அந்த படங்கள் வெளிவந்த பிறகும், ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்த பிறகு தான் கல்யாணம் என்று நெருங்கியவர்களிடம் சொல்லுகிறாராம்.
    முன்னணி நடிகையாக வலம் வருபவர், கவர்ச்சியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கி இருக்கிறாராம்.
    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை, தெலுங்கில் சம்பளம் அதிகமாக கொடுப்பதால், அங்கேயே கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது நடிகை ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்கிறாராம். 

    அந்த படத்தின் ஒரு காட்சியில், கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டாராம். முதலில் மறுப்பு தெரிவித்த நடிகை, அதன்பின் அதிக சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என்று கூறினாராம். தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டு அந்த காட்சிக்கு மட்டும் நடிகைக்கு கூடுதல் சம்பளம் கொடுத்து இருக்கிறார்களாம்.
    தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர், முன்னணி நடிகருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான வாரிசு நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இவர் தற்போது முன்னணி நடிகருடன் மீண்டும் ஜோடி சேர முயற்சி செய்து வருகிறாராம். இதற்காக புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம்.

    நடிகை ஏற்கனவே நடிகருடன் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறாராம். நடிகையின் சக நடிகைகள் அந்த நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார்களாம். அவர்களை வெறுப்பேற்றவே நடிகை இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாராம். இதுதான் நடிகருடன் மீண்டும் நடிக்க நடிகை ஆசைப்பட காரணம் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர், படப்பிடிப்பில் நடிகையின் டார்ச்சர் தாங்கமுடியாமல் புலம்பி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர், நீண்ட வருடமாக படங்களில் நடிக்காமல் இருந்தாராம். மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து ஒரு சில படங்களில் நடித்தாராம். அந்த படங்கள் எதுவும் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓட வில்லையாம். இதனால், பிற மொழியில் வெற்றி பெற்ற ஒரு படத்தை வாங்கி ரீமேக் செய்ய முடிவு எடுத்து அதில் நடித்து வருகிறாராம்.

    இதற்காக தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை அழைத்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறாராம். படப்பிடிப்பில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியவில்லையாம். தனக்கு அந்த காட்சி வையுங்கள். வேறமாதிரி காட்சி வையுங்கள் என்று நடிகரை ரொம்ப டார்ச்சர் செய்கிறாராம் நடிகை. இதனால் அந்த நடிகர் செய்வதறியாது புலம்பி வருகிறாராம்.
    ×