என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆசிய கிரிக்கெட் கோப்பையை வெல்வது யார்? பாகிஸ்தான்- இலங்கை நாளை பலப்பரீட்சை
- இரு அணிகளும் சமபலம் வாய்ந்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது. 20 ஓவரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.
லீக் ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இதில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.
நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று முடிந்தது. இலங்கை தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா (ஒரு வெற்றி 2 தோல்வி), ஆப்கானிஸ்தான் (3 தோல்வி) அணிகள் வெளியேற்றப்பட்டன.
ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஜகமது ரிஸ்வான், பஹர் ஓமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர்.
ஆல்- ரவுண்டர் முகமது நலாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று நடந்த 'சூப்பர் 4' சுற்றில் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்று உள்ளது.
இலங்கை அணி பேட்டிங் கில் நிசாங்கா, குசல் மென்டிஸ், பானுகா ராஜ பக்சே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளார். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணாரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர்.
வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும் (1986, 1997, 2004, 2008, 2014), பாகிஸ்தான் 2 முறையும் (2000, 2012) வென்றுள்ளன.
அதிகபட்சமாக இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்