என் மலர்
வழிபாடு
முக்தி பலன் தரும் ஆலிலைக் கண்ணன்
- ஆலிலைக் கண்ணனை ‘முக்தி தருகின்றவன்’ என்னும் பொருளில் ‘முகுந்தன்’ என்பர்.
- ஆலிலையின் மீது சயனம் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும்.
மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின் மீது சயனம் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும். கிருஷ்ணன் கோகுலத்திலோ, மதுராவில் ஆட்சி செய்யும்போதோ ஆலிலையில் சயனம் கொள்ளவில்லை. மார்க்கண்டேய முனிவருக்கு, தன் மாய சக்தியைக் காட்டுவதற்காக பிரளயத்தை ஏற்படுத்தினார்.
அந்த பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த ஆலிலையில் குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு படுத்துக் காட்சி தந்தார். அப்போது உலக சிருஷ்டி அனைத்தும் குழந்தை பால கிருஷ்ணனுக்குள் ஒடுங்கிக் கிடந்தது. ஆலிலைக் கண்ணனை 'முக்தி தருகின்றவன்' என்னும் பொருளில் 'முகுந்தன்' என்பர்.
தாமரைப் பூப் போன்ற தன் கால் கட்டை விரலை தாமரைப் பூப்போன்ற தன் கையினால் பிடித்து இழுத்து, வாயிதழால் சுவைத்தபடி சயனித்திருக்கும் இக்கோலத்தை வழிபட்டால் பிறவித் துன்பம் நீங்குவதோடு வைகுண்டத்திலும் வாழும் பாக்கியம் உண்டாகும்.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண
கிருஷ்ண ஹரே ஹரே!!
இந்த 16 வார்த்தைகள் ஜீவாத்மாவின் 16 பகுதிகளோடு சம்பந்தப்பட்டது.