search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பேரூர் பட்டீசுவரர் கோவில் தேர்த்திருவிழா 2-ந்தேதி நடக்கிறது
    X

    பேரூர் பட்டீசுவரர் கோவில் தேர்த்திருவிழா 2-ந்தேதி நடக்கிறது

    • 2-ந்தேதி யாகசாலை பூஜை, பங்குனி உத்திர தேர் திருவிழா நடக்கிறது.
    • 5-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கோவையில் புகழ்பெற்ற பேரூர் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி பூஜை, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 9 மணிக்கு கொடியேற்றம், பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா, இரவு 8 மணிக்கு மலர் பல்லாக்கு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    28-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, 29-ந் தேதி யாகசாலை, பூஜை பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா, பூத வாகனம், சிம்ம வாகனத்தில் பட்டீசுவரர் திருவீதி உலா, 30-ந்தேதி யாக சாலை பூஜை, காமதேனு வாகனத்தில் திருவீதி உலா, 31-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, வெள்ளி ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவர் அருட்காட்சி நடக்கிறது.

    1-ந் தேதி யாகசாலை பூஜை, திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, வெள்ளை யானை சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 2-ந்தேதி யாகசாலை பூஜை, பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.

    3-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு வேடுபரி உற்சவம், 4-ந் தேதி யாகசாலை பூஜை, 5.30 மணிக்கு இந்திர விமான தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 5-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த திரு விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×