search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவிலில் புது பள்ளியறை பூஜைவெள்ளிப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளல்
    X

    ராமேசுவரம் கோவிலில் புது பள்ளியறை பூஜைவெள்ளிப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளல்

    • தங்க ஊஞ்சலில் சாமி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
    • நேற்று இரவு புது பள்ளியறை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சியில் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்னர் முகூர்த்த நாளன்று புது பள்ளி அறை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 3-ம் தேதி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனிடையே சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் முடிந்த நிலையில் நேற்று இரவு புது பள்ளியறை நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக இரவு 8 மணிக்கு கருவறையில் உள்ள சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வெள்ளி பல்லக்கில் வைக்கப்பட்டது. வெள்ளி பல்லக்கு மேளதாளம் முழங்க முதல் பிரகாரம், அம்மன் சன்னதி, கொடி மர மண்டபம் வழியாக அம்பாள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க ஊஞ்சலில் சாமி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் கோவிலின் உதவி ஆணையர் பாஸ்கரன், மேலாளர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் பஞ்சமூர்த்தி, ராமநாதன் மற்றும் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டு புது பள்ளியறையில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ஆண்டு தோறும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் முடிந்த பின்னர் ஒரு நாள் மட்டுமே புது பள்ளியறை பூஜைக்கு சாமி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×