என் மலர்
வழிபாடு
ராமன்புதூர் கார்மல் நகர்தூய திருக்குடும்ப ஆலய திருவிழா கொடியேற்றம்
- விழா வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- நிகழ்ச்சியில் பங்குமக்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அருகே உள்ள ராமன்புதூர் கார்மல்நகர் தூய திருக்குடும்ப ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு கொடியேற்றம், 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி போன்றவை நடந்தது. திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதன்மை தந்தை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமை தாங்கினார். முதன்மை அருட்பணியாளர் சகாய ஆனந்த் மறையுரையாற்றினார்.
திருப்பலியை பங்கு நிர்வாகம், திருத்தூது கழகங்களின் ஒருங்கிணைப்புகுழுவினர் சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்குமக்கள், சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்பணியாளர் சகாயபிரபு, ஊர் நிர்வாக குழு தலைவர் ஜோசப் சுந்தர் ராஜ், செயலாளர் ஜுலியன், பொருளாளர் ஆன்றோ ஜெபின் ஆகியோர் வழிகாட்டுதலில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.