என் மலர்
வழிபாடு
ராமன்புதூர் கார்மல் நகர் தூய திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
- இந்த திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- 1-ந்தேதி மதியம் 2 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் தூய திருக்குடும்ப ஆலய பங்கு குடும்ப விழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் விழாவான நாளை மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம். 6.45 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதன்மை தந்தை ஹிலாரியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார்.
விழாவில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மேலராமன்புதூர் பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் தலைமையில் திருப்பலி, இரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடக்கிறது.
விழாவில் 30-ந்தேதி காலை 7 மணிக்கு மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் நெல்சன் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார். 31-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புது வருட திருப்பலி நடைபெறுகிறது.
விழாவின் 10-ம் நாளான வருகிற 1-ந்தேதி காலை 6.30 மணிக்கு கிறிஸ்துநகர் பங்குதந்தை டோனி தலைமை தாங்கி திருக்குடும்ப திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றுகிறார். மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆன்மிக இயக்குனர் அருட்பணியாளர் பெலிக்ஸ் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம், திருவிழா கொடியிறக்கம், இரவு 7.30 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாய பிரபு, ஊர் நிர்வாக குழு தலைவர் ஜோசப் சுந்தர்ராஜ், செயலாளர் ஜூலியன், பொருளாளர் ஆன்ரோ ஜெபின் ஆகியோர் வழிகாட்டுதலின்படி செயற்குழு உறுப்பினர்கள், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.