என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்புல்லாணியில் சித்திரை திருவிழா: பட்டாபிஷேக ராமர் கோவிலில் திருக்கல்யாணம் 1-ந்தேதி நடக்கிறது
- 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 7-ந்தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகின்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் அமைந்துள்ளது ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில். இந்த கோவிலில் பட்டாபிஷேக ராமருக்கு தனியாக சன்னதி ஒன்றும் உள்ளது. அதுபோல் ஆண்டுதோறும் இந்த கோவிலில் பட்டாபிஷேக ராமருக்கு சித்திரைத் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் சித்திரை திருவிழா கடந்த 26-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திருவிழாவின் 3-வது நாளான நேற்று பட்டாபிஷேகராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் 6-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற மே 1-ந் தேதி அன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவிழாவின் 9-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 4-ந் தேதி அன்று காலை 10.30 மணிக்கு மேல் பட்டாபிஷேக ராமர் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது. வருகின்ற 7-ந்தேதி அன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.