என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சத்தீஸ்கர்
- இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது.
- காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.
ராய்பூர்:
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் சத்தீஸ்கர் மாநில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகவும், அடுத்ததாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா.
- இவரை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அவரிடம் கடந்த இரு மாதங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் சௌமியா சௌராசியாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் பதிவு செய்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
- 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சுரங்க இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கிறார்கள்
சத்தீஸ்கர் மாநிலம் மால்கான் என்ற கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
- மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்.
- பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. காட்டு பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க காதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்ரா காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் பிரிவு குழு உறுப்பினர்களாக மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் பொம்ரா காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இன்று காலை நடந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி., கூறும்போது, "பொம்ரா காட்டுப் பகுதியில் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்ட பிறகு ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகளின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது" என்றார்.
- ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.
- விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.
ராய்ப்பூர்:
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் தன்னை கடித்த பாம்பை சிறுவன் ஒருவன் கடித்துக்கொன்ற வினோத சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.
இப்பகுதியில் 200 வகையான பாம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுவன் தீபக்ராம் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.
இதனால் வேதனையடைந்த சிறுவன் கையை உதறினான். ஆனாலும் பாம்பு விடாமல் கையை சுற்றியதால் ஆவேசம் அடைந்த சிறுவன் அந்த பாம்பை பலமுறை திரும்ப கடித்தான். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது. இதற்கிடையே சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு சிறுவனுக்கு விஷ முறிவு மருந்துகள் செலுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுவன் நலமாக உள்ளான்.
இதுகுறித்து பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன் கூறுகையில், தீபக்ராமை பாம்பு கடித்ததும் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இத்தகைய பாம்புக் கடிகள் வலிமிகுந்தவை. கடித்த பகுதியில் மட்டுமே அறிகுறிகளை காட்டக்கூடும். எனினும் அவர் விரைவில் குணமடைந்து விட்டார் என்றார்.
- பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிக்கோட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்மே கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.
சண்டை ஓய்ந்த பிறகு அங்கு கிடந்த 2 மாவோயிஸ்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார்
- முஸ்தாக் கான் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராய்கர்:
சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து முஸ்தாக் கானை கைது செய்தனர்.
அவர் மீது 153 'ஏ' பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
இந்த வழிபாட்டின்போது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார்.
கௌரி- கௌரா வழிபாட்டின் போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், தீமை விலகியோடும் என்றும் நம்பப்படுகிறது என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மாநிலம் செழிக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌரி- கௌரா பூஜை: மக்களின் நலனுக்காக சவுக்கடி வாங்கிய முதலமைச்சர் pic.twitter.com/qNCsA8l6tz
— Maalai Malar தமிழ் (@maalaimalar) October 25, 2022
- சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
- மனோஜ் சின்ஹா மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.
இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் 4.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அம்பிகாபூருக்கு மேற்கே 65 கிமீ தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 5.28 மணியளவில் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்து பீதியில் வீட்டைவிட்டு வெளியேறினர். இருப்பினும் லேசான நில அதிர்வு என்பதால் யாருக்கும் பாதிப்போ அல்லது பொருட்சேதமோ இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பொதுத் தேர்வில் முதல் 10 இடம் பிடிக்கும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்படுவர்.
- மேலும் பரிசுத் தொகையும், லேப்டாப்பும் வழங்கப்படும் என சத்தீஸ்கர் முதல் மந்திரி அறிவித்தார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் முதல் மந்த்ரிரி பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார் முதல் மந்திரி.
இதற்கிடையே, ராஜ்பூர் சட்டசபை தொகுதியில் பேசிய முதல் மந்திரி பூபேஷ் பாகெல், நான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை பார்த்ததும் இங்குள்ள குழந்தைகள் ஆர்ப்பரித்ததை கண்டேன். உயர பறப்பது என்றால் குழந்தைகளுக்கு என்றுமே உற்சாகம்தான். சாதனை செய்யும் மாணவர்களுக்கு தனித்துவமான பரிசு தரப்படும் என்று கூறினால், அவர்கள் அதிக உத்வேகத்துடன் முயற்சி செய்வர். எனவே 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்படுவர் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைநகர் ராய்ப்பூரில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து மாநில அளவில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.அவர்களுக்கு பரிசுத்தொகையும் லேப்டாப்பும் வழங்கப்பட்டது.
பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கவுரவித்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது
- நமன் ஓஜா இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
ராய்ப்பூர்:
இந்தியாவில் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என 8 நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.
இதில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. நமன் ஓஜா அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் இஷான் ஜெயரத்னே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லைஅ.
இறுதியில், இலங்கை அணி 18.5 ஓவரில் 162 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய லெஜெண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்