என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சத்தீஸ்கர்
- ஆர்எஸ்எஸ்-ஐ தடுக்க காங்கிரஸ் தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது.
- உண்மையான கொள்கைகள் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து வளர்ந்தது.
ராய்பூர்:
ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி டிரவுசரில் தீப்பிடிக்கும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாட்டை வெறுப்புச் சூழலில் இருந்து விடுவித்து, பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த சேதங்களை அகற்ற வேண்டும், அந்த இலக்கை படிப்படியாக அடைவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மூன்று நாள் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்ட நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளதாவது:
இந்திய மக்களை இணைக்கும் வேலையை யாராவது செய்தால் அது நல்ல விஷயம்தான், ஆனால் வெறுப்பின் மூலம் எப்படி இணைவது? உண்மையான அர்த்தத்தில் மக்களை இணைக்கும் கூறுகளை அங்கீகரித்து நாட்டை ஒன்றிணைக்க அவர் (ராகுல்காந்தி) முயற்சித்தால், வரவேற்கப்படுவார். இல்லையெனில், நீங்கள் வெறுப்பின் மூலம் மக்களை ஒன்றிணைக்க முயற்சித்தால், அது ஒரு அரசியல் வித்தையாக இருக்கும். மக்களை இணைக்கும் நோக்கத்திற்கு உதவாது.
அவர்கள் (காங்கிரஸ்) நீண்ட காலமாக (ஆர்.எஸ்.எஸ். மீது) வெறுப்பை வளர்த்து வருகின்றனர். அவரது ( ராகுல் காந்தி) முன்னோர்கள் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) அவமதித்துள்ளனர். அதை தடுக்க தங்கள் முழு பலத்தையும் செலுத்தினர். இரண்டு முறை தடை விதித்தனர். ஆனால் எங்களிடம் உண்மையான கொள்கைகள் இருப்பதால் சங்கம் தொடர்ந்து வளர்ந்து வந்தது. அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவுடன், சங்கம் தொடர்ந்து வளர்ந்தது.
காங்கிரஸால் ட்வீட் செய்யப்பட்ட தீயில் எரியும் காக்கி உடை படம் அவர்களின் வெறுப்பை பிரதிபலிக்கிறது. அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்தியாவின் ஆன்மீக அடையாளம் இந்துத்துவா என்று அழைக்கப்படுகிறது. இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மடாய் காட் அருகே இன்று அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. மடாய் காட் அருகே இன்று அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக சென்று லாரி மீது மோதியதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நொறுங்கியது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- முதன்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரெயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
- குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும் சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் விலாய் பகுதியில் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவ் உயிர் பிழைத்தது.
இந்நிலையில், ரெயில்வே விதிகளின் படி ராஜேந்திரகுமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரெயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்தது. தற்போது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் 10 மாத குழந்தையான ராதிகா யாதவுக்கு தன் தந்தையின் பணி வழங்கப்பட்டு உள்ளது.
சிறிய குழந்தை என்பதால் அதன் கைரேகையைப் பதிவுசெய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது. குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததும், சுய விருப்பத்தின் அடிப்படையில் பணிக்கு சேரலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருக்கிறது.
- இதில் 27 ராணுவ வீரர்களும் அடங்குவர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
ராய்ப்பூர்:
மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் கபில்தேவ் பாண்டே நிலச்சரிவில் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பூபேஷ் பாகல் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பிலாய் நேரு நகர் பகுதியில் வசிக்கும் லெப்டினென்ட் கர்னல் கபில் தேவ் பாண்டே வீரமரணம் அடைந்தார் என்ற சோகமான செய்தி கிடைத்தது. அவர் கூர்க்கா ரைபிள்ஸ் பிரிவில் தலைமை தாங்கினார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
- வீரேந்திரா, ராஜேந்திரா மற்றும் ராகேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
- டிரக் டிரைவர் வினய் யாதவ், பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள சூரஜ்பூர் மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாரா சோதனைச் சாவடிக்கு அருகில் லாரி மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது.
துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உ.பி மாநிலம் கோரக்பூரில் இருந்து காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். காலை 5.30 மணியளவில் கார் சோதனைச் சாவடி தடுப்புச் சுவரை அடைந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த சபாபதி யாதவ் (53) மற்றும் ஹரேந்திர யாதவ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீரேந்திரா, ராஜேந்திரா மற்றும் ராகேஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக அம்பிகாபூர் நகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி கூறினார்.
இதையடுத்து, டிரக் டிரைவர் வினய் யாதவ், பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மீட்பு பணியை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டன.
- உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன், உடனடியாக மருத்துவமனையில் அனுமதி
பிஹ்ரிட்:
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு. கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் ராகுல் தவறி விழுந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது. பின்னர் அந்த சுரங்கம் வழியே சிறுவன் சிக்கி இருந்த இடத்திற்கு டிரில் மிஷன் மூலம் துளை போட்டு மீட்பு படையினர் சென்றனர்.
Chhattisgarh | Rescue operation continues for the retrieval of 10-year-old Rahul who fell into a borewell in Pihrid village of Janggir-Champa district. A new tunnel is being dug up for his rescue.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 14, 2022
Video source: District Administration pic.twitter.com/DohrdTWp1C
முன்னதாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பிய மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிறுவனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மீட்பு பணியை ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டன. மொத்தம் ஐநூறு பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ராகுல் ஷாஹுவை உயிருடன் மீட்ட மீட்பு படையினர், சுரங்கம் வழியே வெளியே கொண்டு வந்தனர்.
#WATCH | Chhattisgarh: 10-yr-old Rahul who fell into a borewell in Pihrid village of Janjgir-Champa district was successfully rescued after over 100 hours of operation. pic.twitter.com/HDsoRXvjt3
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 14, 2022
உடனடியாக அந்த சிறுவன் பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜாங்கிரி - ஷம்பா மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் எங்கள் அணி வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- தொடர்ந்து 5வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
இதையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து 5வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சத்தீஸ்கர் ஜாங்கிரி - ஷம்பா மாவட்ட ஆட்சியர் ஜான்ஜ்கிர், ஜிதேந்திர சுக்லா கூறுகையில், "முதல்வர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். மீட்பு பணி 80 மணி நேரமாக நடந்து வருகிறது. ஆனால் மிக விரைவில் ராகுலை மீட்க முடியும். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. முதல்வர் பூபேஷ் பாகேல் வீடியோ மூலம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்," என்று கூறினார்.
- சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- மீட்புப் பணியில் தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹு. இச்சிறுவன் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.
இதுகுறித்து தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்சிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாகச் சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை சிறுவனுக்கு சுயநினைவு உள்ளது. ஆழ்துளை கிணற்றில் சேரும் நீரை அள்ளித் தருகிறான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குஜராத்தில் இருந்து மீட்பு ரோபோ வந்துள்ளது. மதியத்துக்கு மேல் சிறுவன் மீட்கப்படலாம் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்