search icon
என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • சித்திரதுர்காவை சேர்ந்த தர்சனின் ரசிகர் ரேணுகாசாமி பவித்திரா கௌடாவுக்கு தகாத முறையில் மெசேஜ் செய்து வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரேணுகாசமியை சித்திரதுர்காவில் உள்ள தனது ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திரா மூலம் பெங்களூருக்கு அழைத்து வரச் செய்துள்ளார் தர்ஷன்

    கன்னடத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவருக்கத்தக்க மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.

    போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 17 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து வெறு சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில் ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நடிகர் தர்சனும் அவரது தோழி ரேணுகா கௌடாவும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர் என்றும் சித்திரதுர்காவை சேர்ந்த தர்சனின் ரசிகர் ரேணுகாசாமி பவித்திரா கௌடாவுக்கு தகாத முறையில் மெசேஜ் செய்து வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் 10,000 ரூபாய் தருவதாகவும் தன்னுடன்லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வரும்படியும் பவித்ரா கௌடாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ரேணுகாச்சாமி மெசேஜ்களை அனுப்பியுள்ளது அவர்களின் செல்போன்களை ஆராய்ந்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் பவித்திரா கௌடாவுக்கு தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி உடலுறவுக்கு ரேணுகாச்சாமி வற்புறுத்தி வந்ததே இந்த கொலைக்கு மூல காரணம் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேணுகாசமியை சித்திராதுர்காவில் உள்ள தனது ரசிகர் மன்றத் தலைவர் ராகவேந்திரா மூலம் பெங்களூருக்கு அழைத்து வரச் செய்து தர்ஷன் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரேணுகா சாமியின் உடல் மொத்தம் 39 இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.

    ரேணுகா சாமியின் நெஞ்சு எலும்புகள் உடைக்கப்பட்டு ஆணுறுப்பு மின்சாரம் பாய்ச்சி மிதித்து சிதைக்கப்பட்டுள்ளது. ரேணுகா சாமியின் ரத்தத் துளிகள் பவித்ரா கவுடாவின் மற்றும் தர்ஷனின் காலனிகளில் கிடைத்துள்ளதாக குற்றபத்திர்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்ஷன் அடிக்கப்பட்டுள்ள புதிய சிறையில் அவரது கோரிக்கையின்பேரில் 32 இன்ச் டிவி ஆமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளியுலகில் நடப்பதை தெரிந்து கொள்வதற்காக தர்ஷன் சிறை அதிகரிகளிடம் டி வி கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

    • வட்டாட்சியர் காருக்கு வைக்கப்பட்ட தீயை அதிகாரிகள் அணைத்தனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிருத்விராஜை கைது செய்தனர்.

    கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தாயின் புகாரை போலீசார் ஏற்க மறுத்த விரக்தியில், வட்டாட்சியரின் வாகனத்தை பிருத்விராஜ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிருத்விராஜை கைது செய்தனர்.

    அவர் மீது அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், வாகனத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிருத்விராஜ், கடந்த ஜூலை மாதம் காணாமல் போனதாக அவரது தாயார் போலீசாரிடம் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் அவரது புகாரை போலீசார் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு திரும்பிய பிருத்விராஜ் ஜூலை 23 அன்று தனது தாயாரின் புகார் தொடர்பாக போலீசாரிடம் பேசுவதற்கு சென்றுள்ளார்.

    அப்போது, ஆகஸ்ட் 14ம் தேதி, விதான சவுதா அருகே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததற்காக பிருத்விராஜ் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கொரோனா கால நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக அந்த சமயத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியில் பாஜக மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதுதொடர்பாக கடந்த ஆண்டு நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

    கர்நாடகாவில் ஆளும் காங்கிரசை சேர்ந்த முதலவர் சித்தராமையா சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் கொரோனா கால நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக அந்த சமயத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியில் பாஜக மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பலகோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்றும், பல கோப்புகள் காணாமல் போயுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ரூ.1000 கோடி வரை கொரோனா நிவாரண நிதியில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கிடையே இந்த அறிக்கை தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த குளிர்கால கூட்டத்தொடர் வரை இன்னும் 6 மாதங்களுக்குக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 202 ரன்களை எடுத்தது.

    பெங்களூரு:

    துலிப் கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய அணியில் உள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் தவிர மற்ற அனைத்து நட்சத்திர வீரர்களும் கலந்து கொண்ட டெஸ்ட் தொடர் போன்றே விளையாடி வருகின்றனர்.

    செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோதுவதால் துலிப் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது. ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் மோதினர். டாஸ் வென்ற ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், அபிமன்யு களமிறங்கினர். அபிமன்யு 13 ரன், ஜெய்ஸ்வால் 30 ரன், சர்ப்ராஸ் கான் 9 ரன், ரிஷப் பண்ட் 7 ரன், சாய் கிஷோர் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய முஷீர் கான் சதம் விளாசி அசத்தினார். 8-வது விக்கெட்டுக்கு முஷீர் கான், நவ்தீப் சைனி ஜோடி108 ரன்கள் சேர்த்துள்ளது.

    முதல் நாள் முடிவில் இந்தியா பி 79 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. முஷீர் கான் 105 ரன்னும், நவ்தீப் சைனி 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்தியா ஏ அணி சார்பில் ஆவேஷ் கான், கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    • இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்தார்.
    • தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியிருந்தார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், "போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு! வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு. விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம்" என்று தெரிவித்திருந்தார்.

    வாழை படத்தை பாராட்டிய திருமாவளவன் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வெளியான பா ரஞ்சித்தின் தங்களின் படத்தை ஏன் பாராட்டவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

    இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "வாழை' படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். 'தங்கலான்' படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் தங்கலான் படத்தை திருமாவளவன் பார்த்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணன் புகழேந்தி அவர்களோடு தங்கலான் திரைப்படம் காணும் வாய்ப்பு இன்று கிடைத்தது. தங்கலான் திரைப்படம் உழைப்பின் மேன்மையை உணர்த்துகிறது. சாதி வர்ணம் போன்ற்வற்றால் அடிமைப்பட்டு கிடந்த மக்களை விடுவிப்பதற்கு தங்களின் இருப்பிடத்திலிருந்து வெளியேறி கோலார் பகுதியில் புதைந்து கிடைக்கும் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியை தங்கலான் தலைமை தாங்கி மேற்கொள்கிறார்.

    அதில் அந்த மக்கள் சந்திக்கிற அவலங்களை வெளிப்படுத்தும் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது. ஒருபுறம் நிலக்கிழார்கள் செய்கிற கொடுமை இன்னொருபுறம் பிரிட்டிசார் செய்கிற அடக்குமுறை, இவற்றை எல்லாம் தாண்டி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த உழைக்கும் மக்கள் மேற்கொண்ட இந்த கடுமையான தங்கம் வெட்டி எடுக்கிற பணியை இந்த திரைப்படம் உணர்த்துகிறது.

    இயக்குநர் பா ரஞ்சித் அவருக்கே உரிய பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். புனைவுகள் கலந்திருப்பது இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை தருகிறது" என்று தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சியினர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறினர்.
    • நான் பொய் சொல்லவில்லை. எந்த தவறும் செய்யவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது.

    இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முறைகேட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து மைசூருவில் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    'மூடா' விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. அதனால் நான் எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். இந்த விவகாரத்தில் நான் பதற்றம் அடையவோ, கவலைப்படவோ தேவையில்லை.

    எதிர்க்கட்சியினர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறினர். தற்போது அவற்றை நிரூபிக்க முடியாமல் அவர்கள் தான் திணறி வருகிறார்கள். நான் பொய் சொல்லவில்லை. எந்த தவறும் செய்யவில்லை. அதனால் நான் கவலை இல்லாமல் இருக்கிறேன்.

    யார் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பது? கட்சி மேலிடமும், எம்.எல்.ஏ.க்களும் தான் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பார்கள். எதிர்க்கட்சியினர் அல்ல.

    கொரோனா காலத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தாக்கல் செய்த அறிக்கை மந்திரிசபையில் தாக்கல் செய்யப்படும். இதற்கான மந்திரிசபை கூட்டம் நாளை (5-ந் தேதி) நடக்கிறது.

    அந்த கூட்டத்தில் மேற்கொண்டு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்யப்படும். எங்களுக்கும் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று தெரியாது.

    அந்த அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் சுகாதார துறை மந்திரியும், தற்போது எம்.பி.யுமான சுதாகர் கூறியுள்ளார்.

    அப்படியானால் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்று அவருக்கு தெரியுமா?. அவர் தவறு செய்திருப்பதால் அவருக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • தலைநகர் பெங்களூருவில் தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.
    • டெங்கு பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 25 ஆயிரத்து 408 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது நகரில் 11 ஆயிரத்து 590 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் ஏறத்தாழ 50 சதவீதம் தலைநகரிலேயே பதிவாகியுள்ளது.

    இந்த டெங்கு பாதிப்புக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக அரசு, தொற்றுநோய் பரவல் சட்டம்-2020-ன் படி டெங்கு காய்ச்சல் பரவலை தொற்றுநோயாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், குடியிருப்பு கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்தால் அதன் உாிமையாளருக்கு நகரமாக இருந்தால் ரூ.400, கிராமமாக இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

    வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள், சுகாதார மையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், ரெசார்ட், கடைகள், இளநீர் வியாபாரிகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பஞ்சர் சரிசெய்யும் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் அவற்றுக்கு நகரமாக இருந்தால் ரூ.1,000-ம், கிராமமாக இருந்தால் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும் என்பன உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.

    • கர்நாடகாவில் கேவாலா என்ற அறக்கட்டளையை பிரதீப் உல்லால் என்ற யோகா ஆசிரியர் நடத்தி வருகிறார்.
    • வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டத்தில் கேவாலா அறக்கட்டளையை நடத்தி வரும் பிரதீப் உல்லால் (54) என்ற யோகா ஆசிரியர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். முந்தையை பிறவியில் நாம் இருவரும் உறவில் இருந்ததாக கூறி தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    அப்பெண் தனது புகாரில், "பஞ்சாப்பை சேர்ந்த நான் 2000 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தேன். பிரதீப் உல்லால் ஆன்லைனில் நடத்திய யோகா வகுப்புகளில் நான் கடந்த 5 ஆண்டுகளாக கலந்து கொண்டேன்.

    அப்போது நாங்கள் இருவரும் கடந்த பிறவியில் உறவில் இருந்ததாக என்னை நம்ப வைத்து 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் என்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது நான் கருவுற்றேன், பின்னர் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது" என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.

    • கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மாதம் ரூ.12,000 சம்பளம் வாங்கும் கணவன் குழந்தை பராமரிப்பு செலவாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கணவன் ரூ.12,000 மட்டுமே சம்பளம் வாங்குவதை அறிந்த நீதிபதி, உங்களுக்கு ரூ.10,000 கொடுத்துவிட நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரால் எப்படி வாழ முடியும்? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கணவரின் ஊதியம் அதிகரித்தால், குழந்தை பராமரிப்பு செலவை அதிகரிக்கக்கோரி மனைவி மற்றொரு வழக்கு தொடரலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.
    • மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 25 வயதுடைய இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கொலை தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்.எம்.வி. லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே சில மாதங்களாக பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    அதன்படி கடந்த செவ்வாய்கிழமை அன்று நவ்யஸ்ரீ, தனது தோழியான ஐஸ்வர்யாவை போனில் தொடர்பு கொண்டு திருமண வாழ்க்கை குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார். இதனால் நவ்யஸ்ரீ-யை சந்தித்து பேசுவதற்காக ஐஸ்வர்யா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யா, மற்றொரு நண்பரான அனில் என்பவருடன் சேர்ந்து நவ்யஸ்ரீ, பிரச்சனையான திருமண வாழ்க்கை குறித்து விவாதித்துள்ளார். அதில் நவ்யஸ்ரீ அவரது கணவர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து மூவரும் இரவு உணவு அருந்தி விட்டு அனில் புறப்பட்டு சென்றதும், ஐஸ்வர்யா, நவ்யஸ்ரீ வீட்டிலேயே தங்கியுள்ளார். மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்த ஐஸ்வர்யா நடந்த விவரங்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நவ்யஸ்ரீ மீது சந்தேகம் கொண்ட கிரண், இரவு நேரத்தில் சாவியை பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
    • சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்யப்பட்டவருடன் குற்றவாளியின் மனைவிக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த குற்றவாளி, விமான நிலைய ஊழியரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

    இதற்காக ஒரு பையில் கத்தியை வாங்கி மறைத்து வைத்துக்கொண்டு பஸ்சில் விமான நிலையத்திற்கு சென்ற அவர், அந்த வாலிபர் வெளியே வரும்வரை காத்திருந்தார். கொலையானவர் விமான நிலையத்தில் ட்ரோலி ஆபரேட்டர் வேலை பார்த்து வந்தார். அவர் வேலை முடிந்து வெளியே வந்ததும் குற்றவாளி தனது திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • உடுப்பி நகரின் சாலைகள் மழையால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    இந்நிலையில், உடுப்பி நகரின் மோசமடைந்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வித்தியமான போராட்டத்தை அந்நகரின் மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

    உடுப்பி-மால்பே சாலையில் எமதர்மன், சித்திரகுப்தன் வேடம் அணிந்த சில ஆண்கள் சாலைகளில் பள்ளமாக இருக்கும் பகுதிகளில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்தினர். சாலைகளை அரசு சீரமைக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த போராட்ட வடிவத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    ×