என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கர்நாடகா
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
- முடா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகின்றன.
முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முடா விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார். அதற்கு கார்கே கன்னடத்தில் பதில் தெரிவித்தார். அதற்கு இந்தியில் பதில் தெறிக்குமாறு அந்த செய்தியாளர் தெரிவித்தார். இதனை கேட்டதும் கடுப்பான கார்கே, கேள்வியை கன்னடத்தில் கேட்குமாறு காட்டமாக தெரிவித்தார்.
"கர்நாடகாவுக்கு வரும் போது சிறிதாவது கன்னடம் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களால் தமிழ்நாட்டிற்குச் சென்று இந்தியில் கேள்வி கேட்க முடியுமா? கர்நாடகாவுக்கு வரும் போது கொஞ்சமாவது கன்னட மொழியை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டு கார்கே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
மல்லிகார்ஜுன கார்கே பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Can you ask questions in Hindi in Tamilnadu.
— We Dravidians (@WeDravidians) August 17, 2024
-Mallikarjun Kharge pic.twitter.com/1Z6KE0IZD8
- நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்கில் வீலிங் செய்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
- இதனால் ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள நெரிசல் மிகுந்த சாலையில் இளைஞர்கள் சிலர் அஜாக்கிரதையாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் கோவமான பொதுமக்கள் இளைஞர்களின் பைக்குகளை 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே தூக்கி வீசினர். இதனையடுத்து, ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
- காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் உள்ள பரபரப்பான சாலையில் 44 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து பெங்களூரு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய சாலையில் பைக்கில் ஸ்டண்ட் செய்து கொண்டிருந்த 44 பேரை கைது செய்தனர். இவர்களின் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை.
- கர்நாடக அரசை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.
பெங்களூரு:
முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறுகையில், மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி. கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தவறு செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை என்றார்.
இந்நிலையில், கர்நாடக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
- எனது ஆட்சியைக் கவிழ்க்க பெரிய சதி என சித்தராமையா குற்றம் சாட்டினார்.
- நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினா செய்ய தேவையில்லை என்றார்.
பெங்களூரு:
முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறுகையில், மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்த ராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி.
டெல்லி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவினர் இதைச் செய்துள்ளனர்.
கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்த சதியில் மத்திய அரசும், பாஜக, ஜேடி(எஸ்) உள்ளிட்ட கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமை என்னுடன் உள்ளது. முழு அமைச்சரவையும், அரசாங்கமும் என்னுடன் உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்.
நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினா செய்ய தேவையில்லை என தெரிவித்தார்.
- மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகிறது.
- சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஒப்புதல் வழங்கியது தொடர்பாக பரமேஷ்வரா கூறியதாவது-
மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இதன் மூலம் தெளிவாகிறது. சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு நுணுக்கமான வகையில் தெளிவான விளக்கம் அளித்திருந்தோம். அதில் இந்த முறைகேட்டில் சித்தராமையா எப்படி கட்டமைக்கப்பட்டிருந்தார் என்பது குறித்து தெரிவித்திருந்தோம். அப்படியிருந்தும் ஆளுநர் விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியிருப்பது, மேலிட (மத்திய அரசு) அழுத்தம் என்பதை இயற்கையாகவே உணர்கிறோம்.
தொடக்கத்தில் இருந்தே ஆளுநர் மாளிகை தவறாக பயன்படுத்தபட்டு வருவதாக சொல்லிக் கொண்டு வருகிறோம். தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது.
சித்தராமையாவுக்கு எதிராக எந்தவிதமான விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும். சட்டப்பூர்வமாக இதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
- முடா முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் கர்நாடகாவில் விசுவரூபம் எடுத்துள்ளது.
- கர்நாடக கவர்னர் பாஜகவின் கைப்பாவை என முதல்வர் சித்தராமையா விமர்சனம்.
கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் (MUDA) முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றம் சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்களான டி.ஜே. ஆப்ரஹாம், பிரதீப், கிருஷ்ணா ஆகிய 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அனுமதி வழங்கக் கூடாது? இது தொடர்பாக 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நோட்டீஸ் தொடர்பாக கர்நாடக மாநில கேபினட் ஆலோசனை நடத்தியது. கவர்னர் நோட்டீஸை திரும்பப்பெற வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து, கவர்னர் தாவர்சந்த் கெலாட் மத்திய அரசு மற்றும் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கைப்பாவை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கடுமையாக விமர்சித்தார். கவர்னர் நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம். அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முடா முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.
- விபின் குப்தாவை மீட்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
- திருமணத்திற்கு பின்பு கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
பெங்களூரு:
பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் விபின் குப்தா. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் விபின் குப்தா பணியாற்றினார். அவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், கடந்த 4-ம் தேதி வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற விபின் குப்தா திரும்பி வரவில்லை.
அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ,1.80 லட்சம் எடுக்கப்பட்டு இருந்ததால், விபின் குப்தா கடத்தப்பட்டு இருப்பதாக கூறி கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்திலும், போலீஸ் கமிஷனருக்கு 'எக்ஸ்' தளத்தின் மூலமாகவும் விபின் குப்தாவின் மனைவி புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். விபின் குப்தாவை மீட்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், காணாமல் போன கம்ப்யூட்டர் என்ஜினீயர் விபின் குப்தாவை உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர். அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது விபின் குப்தாவுக்கு 34 வயதாகிறது, ஆனால் அவரது மனைவிக்கு 42 வயதாகிறது. 8 வயது மூத்த பெண்ணை அவர் திருமணம் செய்திருந்தார்.
திருமணத்திற்கு பின்பு கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. விபின் குப்தாவுக்கு அவரது மனைவி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் அவர் வீட்டை விட்டு ஓடியது தெரியவந்தது.
அதேநேரத்தில் மனைவி தன்னை தொல்லைப்படுத்துவதால் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என போலீசாரிடம் விபின் குப்தா திட்டவட்டமாக கூறிவிட்டார். தன்னை சிறையில் வேண்டும் என்றால் அடையுங்கள், ஆனால் வீட்டுக்கு மட்டும் செல்ல மாட்டேன் என போலீசாரிடம் அடம் பிடித்துள்ளார். விபின் குப்தாவுக்கு அவரது மனைவி மனரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 4-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய விபின் குப்தா மொட்டை அடித்துக்கொண்டு உத்தரபிரதேசத்திற்கு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக பெங்களூருவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சென்றிருந்தார். அங்கு சென்று போலீசார் விபின் குப்தாவை மீட்டு இருந்தனர்.
- கர்நாடக அரசின் நிதியை வங்கிகள் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
- இந்த பிரச்சனைகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட வங்கிகள் 15 நாட்கள் அவகாசம் கோரின.
கர்நாடகாவின் அனைத்து அரசு துறைகளும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள தங்களது கணக்குகளை மூடி, வைப்புத் தொகைகளை உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள அரசு நிதியை வங்கிகள் தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்தது.
இந்நிலையில், இந்த பிரச்சனைகளை சரிசெய்ய 15 நாட்கள் அவகாசம் கோரி சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் கர்நாடக அரசிடம் வலியுறுத்தினர்.
வங்கிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த உத்தரவை 15 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
- அணையில் இருந்து 60 டி.எம்.சிக்கும் மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
- வினாடிக்கு 35 ஆயிரத்து 437 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் முனிராபாத் பகுதியில் துங்கபத்ரா அணை உள்ளது. இந்த அணையில் மொத்தம் 32 மதகுகள் உள்ளன. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் கடந்த வாரம் அணை முழு நீர்மட்ட கொள்ளளவான 105 டி.எம்.சி.யை எட்டியது. இந்த நிலையில் நீரின் அழுத்தம் காரணமாக கடந்த 10-ந்தேதி இரவு அணையின் 19-வது மதகு சங்கிலி இணைப்பு உடைந்து நீரில் மதகு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அணையை பாதுகாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 32 மதகுகள் வழியாகவும் சுமார் 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர் இருப்பு குறைந்தது. அணையில் இருந்து 60 டி.எம்.சிக்கும் மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மதகு பொருத்தும் பணி தொடங்கியது. இதற்காக ஜிண்டால் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 60 அடி அகலம் கொண்ட கேட் உறுப்பு தூண்கள் அணை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. ராட்சத கிரேன்கள் உதவியுடன் இரும்பு கேட்டின் பாகங்கள் எடுத்து பொருத்தும் பணி இரவு-பகலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வினாடிக்கு 35 ஆயிரத்து 437 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மதகு பொருத்தும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் கேட் உறுப்பு தூண்கள் மதகு பகுதியில் சரியாக பொருந்தவில்லை. இதனால் கேட் பொருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வேறு தூண்கள் கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பெங்களூருவை சேர்ந்தவர் இஷான் சர்மா.
- சமீபத்தில் பதிவிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூருவை சேர்ந்தவர் இஷான் சர்மா. யூடியூப் பிரபலமான இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அப்போது ஊழியர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டநிலையில் குடிநீருக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் ஒருநாள் கட்டணம் ரூ,16 ஆயிரம் என்றும் ஆனால் குடிநீர் காசு கொடுத்து தனியாகதான் வாங்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இஷான் சர்மாவின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில் ஓட்டல் நிர்வாகத்தினர் மீது கடும் கண்டனம் எழுந்தது.
- குமாரசாமி எம்.பி.யாக வெற்றி பெற்றதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- டிகே சிவக்குமார் சகோதரர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் சன்னபட்னா சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன் என காங்கிரஸ் தலைவரும், கர்நாடக மாநில துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் போட்டியிட்டாலும் தனக்கு கவலை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரான இவர் சன்னபட்னாவில் கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார். அரசியல் உள்நோக்கத்துடன் இங்கு டிகே சிவக்குமார் சுதந்திர தினத்தை கொண்டாடியதாக கூறப்படுகிறது.
தற்போது டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.-வாக உள்ளார். மத்திய மந்திரியாக உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
டிகே சிவக்குமாரின் சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டிகே சுரேஷ் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் சன்னபட்னா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அண்ணனின் தோல்விக்குப் பழிவாங்கவும், அப்பகுதியில் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டவும் துணை முதல்வர் டிகே சிவக்குமார் களம் இறங்கலாம் எனத் தெரிகிறது.
சன்னபட்னா தொகுதியில் வெற்றி பெற்றால், அதன்பின் தற்போது அவர் வெற்றி பெற்ற தொகுதியை அண்ணனுக்கு விட்டுக்கொடுக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்