என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல நண்பர்களுடன் சேர்ந்து கரண் ரீல்ஸ் எடுத்துள்ளான்.
- உண்மையறிந்து கரணின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஒட்டியுள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலம் மோனேரா மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ரீக்ரியேட் செய்ய முயன்றபோது கழுத்தில் கயிறு இறுக்கி 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொள்வது போல் இன்ஸ்டாகிராமில் வந்த ரீல்ஸை கரண் என்ற மாணவன் பார்த்துள்ள்ளான். இம்மாதிரி தானும் ரீல்ஸ் செய்து வெளியிட்டால் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் என்று கரண் எண்ணியுள்ளான்.
ஆகவே தூக்கு மாட்டி தற்கொலை செய்வது போல நண்பர்களுடன் சேர்ந்து கரண் ரீல்ஸ் எடுத்துள்ளான். அப்போது கழுத்தை கயிறு இறுக்கி கரண் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது அவன் நடிப்பதாக நினைத்துள்ளனர்.
பின்னர் உண்மையறிந்து கரணின் நண்பர்கள் அந்த இடத்தை விட்டு ஒட்டியுள்ளனர். பின் உண்மையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ரீல்ஸ் எடுத்த மொபைல்போனை கைப்பற்றிய போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரு பெண்களின் மீது கொட்டப்பட்டதால் கிட்டதட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர்.
- வீடியாவை பகிர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் புதையும் அளவுக்கு டிரக் மூலம் அவர்கள்மீது மண் கொட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ரேவா மாவட்டத்தில் உள்ள ஹினோட்டா ஜோரோட் என்ற கிராமத்தில் மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே என்று இரு பெண்களுக்கு உறவினர்களுடன் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் அந்த நிலத்தில் உறவினர்கள் சாலை அமைக்க முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் சரளை மண்ணை சுமந்து நின்ற டிரக்கின் முன் அமர்ந்து இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தியா நிலையில் அந்த டிரக்கில் இருந்த மண் இரு பெண்களின் மீது கொட்டப்பட்டதால் கிட்டதட்ட அவர்கள் முழுதாக மண்ணில் புதைந்தனர்.
உடனே அருகில் இருந்த கிராம வாசிகள் துரிதமாக செயல்பட்டு அந்த பெண்களை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய்யப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மண்ணில் இருந்து மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியாவை பகிர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றன.
- வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
- வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது.
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வீட்டில் அவர் மயக்க நிலைக்கு சென்றார்.
உடனடியாக அவரை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் வாலிபரின் வயிற்றில் எக்ஸ்ரே செய்தனர். அப்போது வயிற்றில் நீண்ட பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவருக்கு ஆபரேஷன் செய்தனர். அப்போது அவருடைய வயிற்றில் ஒரு அடி நீளத்திற்கு சுரைக்காய் இருந்தது தெரிய வந்தது. அதனை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். மேலும் சுரைக்காய் வயிற்றில் இருந்ததால் வாலிபரின் பெருங்குடல் கிழிந்து இருந்தது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாலிபரின் ஆசனவாய் வழியாக அவருடைய உடலுக்குள் சுரைக்காய் செலுத்தப்பட்டுள்ளது. வாலிபர் சுயநினைவு இல்லாமல் தற்போது உள்ளார்.
அவருடைய வயிற்றில் யாராவது வலுக்கட்டாயமாக சுரைக்காய் செருகினார்களா?. அல்லது அவரே வைத்தாரா என்பது தெரியவில்லை.
வாலிபருக்கு சுயநினைவு வந்தால் மட்டுமே இது குறித்து தகவல் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
- மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெட்ரா மகாகாளி கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
- பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோவில் உள்ள உஜ்ஜைன் நகரிலும் இந்த விதியை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக உஜ்ஜைன் மாநகராட்சி மேயர் முகேஷ் தட்வால் வெளியிட்டுள்ள உத்தரவில், தங்களின் கடைகளின் முன் உரிமையாளர்கள் தங்களின் பெயரையும், தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். உத்தரவைப் பின்பற்ற தவறும் பட்சத்தில் முதல் முறை 2000 ரூபாயும் 2 வது முறை 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து வருடம் முழுவதும் மகாகாளேஸ்வர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த உத்தரவு பாதுகாப்புக்காகவும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய மட்டுமே என்றும் முஸ்லிம் கடை உரிமையாளர்களை குறிவைத்து அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தொடங்கிவைத்துள்ள இந்த புதிய சர்ச்சை மக்கள் அதிகம் வருகை தரும் நகரங்களில் இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ற விமர்சனக்குரல்கள் எழுந்துள்ளன.
- சிபிஐ விசாரணைக்கு முன்னதாக மாநில அரசின் எழுத்துப்பூர்வ ஒப்புதலை பெற வேண்டும்.
- தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களும் இந்த விதியை நடைமுறைப்படுத்தியுள்ளன.
மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ தனி அதிகாரம் பெற்ற அமைப்பாகும். இந்தியாவில் உள்ள எந்தவொரு பகுதியில் உள்ள தனி நபர், அரசு அதிகாரி உள்ளிட்டோரை விசாரணை நடத்தவும், அவர்களுடைய இடங்களில் சோதனை நடத்தவும் அதிகாரம் உண்டு
ஆனால் மத்திய அரசு சிபிஐ-யை தவறாக பயன்படுத்துகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிபிஐ மூலம் அங்குள்ள தலைவர்களை சோதனை என்ற பெயரில் மிரட்டி பணிய வைக்க முயல்வதாக அடிக்கடி குற்றச்சாட்டுவது உண்டு. இதனால் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் சிபிஐ அனுமதி பெற்ற பிறகே மாநிலங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தில் இதுபோன்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது.
சிபிஐ தனது அதிகார வரம்பில் விசாரணையைத் தொடங்குவதற்கு முன் மாநிலத்திடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவை என மத்திய பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூலை 1-ந்தேதி முன்தேதியிட்டு நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி சிறப்பு போலீஸ் சட்டத்தின் 6-வது பிரிவின்படி, அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதலை பெறுவது அவசியம்.
உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது மகாராஷ்டிரா மாநிலமும் இந்த முடிவை எடுத்திருந்தது. பின்னர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பின் அது திரும்பப் பெறப்பட்டது.
- இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர்.
- ஆட்சியர் அலுவலக அறையில் அழுதபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனது நிலம் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைகளை குவித்தபடி புரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் உள்ள சங்கர்லால் என்ற விவசாயி வைத்திருந்த நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அந்த பாதி நிலத்தை அதன் அப்போதய சொந்தக்காரர்கள் ஏற்கனவே பக்கத்து கிராமத்தில் உள்ளவருக்கு 2010 ஆம் ஆண்டில் விற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தாசில்தார் முன்னிலையில் நடந்த பத்திரப்பதிவுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி தற்போது நிலத்தை வாங்கியவரின் மகன் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அந்த நிலம் தன்னுடையதே என்றும் தனது குடும்பமே அதில் இத்தனை காலமாக விவசாயம் பார்த்து வந்ததாகவும், எனவே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும் பல முறை சங்கர்லால் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி சங்கர்கர்லால், தனது நிலத்தை மாஃபியாக்கள் தன்னிடம் இருந்து பறித்துவிட்டனர், தாசில்தாரின் தவறினால் விவசாயியான நான் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர். அரசாங்கத்தால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர் என்று ஆட்சியர் அலுவலக அறையில் கைகளை குவித்தபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் திக்விஜய் சிங்.
- கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்து பேசினார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் முன்னாள் முதல் மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கட்சி தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
செய்தியை திறம்பட தெரிவிப்பது மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பதை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஒருபோதும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். ஒருபோதும் அடிக்க மாட்டார்கள். ஒருபோதும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள், மாறாக எங்களை சிறைக்கு அனுப்புவார்கள்.
ஆர்.எஸ்.எஸ் பொதுவாக 3 விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விவாதங்கள் நடத்துதல் மற்றும் இறுதியாக இயக்கத்திற்கு ஏற்படும் செலவுகள்.
நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராட விரும்பினால் அவர்களின் சொந்த விளையாட்டில் அவர்களை வெல்லுங்கள், நிச்சயமாக, உடல் ரீதியாக அல்ல, ஆனால் அறிவுபூர்வமாக என தெரிவித்தார்.
- பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர்.
- மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவா என்ற 25 வயது பழங்குடியின இளைஞரை அவரது திருமணம் நடந்து கொண்டிருந்தபோதே நடுவில் புகுந்து போலீசார் கைது செய்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக தேவாவும் அவரது உறவினர் கங்காராமும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அன்றைய இரவே, 'உங்களது மகன் தேவா கஸ்டடியில் மாரடைப்பால் இறந்துவிட்டான்' என்று அவரது குடுபத்துக்கு போலீசிடம் இருந்து போன் வந்துள்ளது.
இதனால் பழங்குடியின இளைஞரான தேவாவின் குடும்பபும் உறவினர்களும் அதிர்ச்சியைடந்த நிலையில் போலீஸ்தான் தேவாவை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேவாவுடன் கல்யாணமாக இருந்த மணப்பெண் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் திரண்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொதிப்படைந்த தேவாவின் உறவின பெண்மணிகள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து தங்களின் ஆடைகளை அவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்ளே தரையில் படுத்து அழுது புலம்பியுள்ளனர். தங்களின் வளையல்களை உடைத்து கூச்சலிட்டனர் அவர்களை போலீசார் வெளியேற்ற முயன்ற நிலையில் அங்கு நடந்த கைகலப்பில் ஒரு பெண் படுகாயமடைந்தார்.
தேவாவுக்கு மாரடைப்பு வந்தது உண்மைதான் என்றும் மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு சிபிஆர் வழங்கியும் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 'இளம் வயதில் எப்படி மாரடைப்பு வரும், தேவாவையும், கங்காரமையும் போலீசார் அடித்து துன்புறுத்தியுள்ளனர். தற்போது படுகாயங்களுடன் இருக்கும் கங்காராமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று தேவாவின் உறவினர்கள் தரப்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
- போஜ்சாலா வளாகத்தில் போஜிஸாலா கோவிலும் அதன் அருகில் கமல் மவுலா மசூதியும் அருகருகில் உள்ளது.
- கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில் உள்ள வாக்தேவி சரஸ்வதி கோவில் மற்றும் கமல் மவுலா மசூதியும் ஒரே இடத்தில உள்ளது. மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டடமே இருந்ததாக சிலர் சர்ச்சையை கிளப்பிய நிலையில் போஜ்சாலா வளாகத்தை ஆய்வு செய்ய கடந்த மார்ச் மாதம் அம்மாநில உயர்நநீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்துக்கு [ASI] உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 'போஜ்சாலாவின் உள்ள கமல் மவுலா மசூதிக் கட்டடமானது ஏற்கனவே அங்கிருந்த கோவில் கட்டடத்தின் எச்சங்களிலின் மீது கட்டப்பட்டுள்ளது.
மசூதியின் தரைப்பகுதி ஏற்கனவே இருந்த கல்வெட்டுகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கோவிலின் தூண்கள் மசூதி கட்டடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த தூண்களில் இந்து கடவுளர்களின் சிதைந்த சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுபோன்ற மொத்தம் 94 சிற்பங்கள் அங்கு தென்படுகிறது என்று தனது அறிக்கையில் ASI தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை வரும் ஜூலை 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது.
- மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
- கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார்.
- பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஓய்வு பெற்ற மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ஆர்யா இன்று அம்மாநில பாஜகவில் இணைந்துள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோ பாஜகவின் இணைந்த இரண்டு மாதத்தில் மேலும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பாஜகவில் இணைந்துள்ளார்.
2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
- கணவர் கருப்பாக இருப்பதால் மனைவி அடிக்கடி அவருடன் சண்டையிட்டுள்ளார்.
- நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்றார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. விஷால் சுற்றே கருப்பாக இருப்பதால் திருமணமானது முதல் மனைவி அவரை கிண்டல் செய்து வந்ததுடன், நிறத்தைக் காரணம் காட்டி கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே, விஷால் மனைவிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கணவன் வீட்டில் வைத்துவிட்டு அந்தப் பெண் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
மனைவியை அழைத்துவர அவரது வீட்டிற்கு விஷால் சென்றபோது, கருப்பு நிறத்தை காரணம் காட்டி கணவருடன் திரும்ப மறுத்தார்.
இதனால் விஷால், தனது தாயுடன் சென்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், தான் கருப்பு நிறமாக இருப்பதால் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வரும் சனிக்கிழமை இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கருப்பு நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்துசென்றது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்