என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- வீடியோ வைரலாகி, 5.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசம்:
சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் லைக்குகளை பெற வித்தியாசமான வீடியோக்களையும், சிலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் குமக்கட் லாலி என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாராகிராமில் 54.4K ஃபாலோவர்ஸ்களைக் கொண்ட குமக்கட் லாலி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு தனக்கு ஏற்படும் அனுபவங்களை பகிர்ந்து வருகிகிறார். அந்தவகையில், மத்திய பிரதேசம் மாநிலம் கஜுராஹோ கிராமத்திற்கு சென்ற குமக்கட் அங்கு இரண்டு மாடிகளைக் கொண்ட பாரம்பரியமான மண் வீட்டை கண்டு ஆச்சரியப்பட்டார்.
வீடியோவில், ஆய்வின் போது தனக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதால், அங்கு வசிப்பவர்களிடம் தண்ணீர் கேட்டதாகவும், அதற்கு ஒரு குடும்பத்தினரால் அன்பாக வரவேற்கப்பட்டு தண்ணீர் கொடுப்பட்டது என்று குமக்கட் லாலி கூறுகிறார்.
குடியிருப்பின் உள்ளே சுற்றி பார்க்க அழைத்து செல்லப்படும் போது, வீட்டின் சிறிய வாசல் வழியாக குனிந்து சென்று விசாலமான அறைகளையும் மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளையும் கண்டு திகைத்துப் போகிறார்.
வெளியே 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தபோதிலும், மண் வீட்டின் உட்புறம் 20 முதல் 25 டிகிரி வரை இருந்தது.
இந்த வீடியோ வைரலாகி, 5.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் பல பயனர்கள், கிராமப்புற கட்டிடக்கலையின் புத்தி கூர்மை மற்றும் எளிமைக்கு தங்கள் பாராட்டை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
- வீட்டில் கடிதம் ஏதாவது உள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில் கடிதம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
- தற்கொலைக்கான காரணம் என்ன? இது தற்கொலையா? என விசாரிக்க அலிராஜ்பூரின் துணைப் பிரிவு காவல் அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
போபால்:
மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவ்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ராகேஷ் தோத்வா (27), அவரது மனைவி லலிதா தோத்வா (25) மற்றும் அவர்களது மகன்கள் பிரகாஷ் (7), அக்ஷய் (5) ஆகியோரின் வீட்டின் கூரையில் கயிற்றால் அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. மகள் லக்ஷ்மி (9) தரையில் கிடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வீட்டில் கடிதம் ஏதாவது உள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில் கடிதம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனிடையே, இவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன? இது தற்கொலையா? என விசாரிக்க அலிராஜ்பூரின் துணைப் பிரிவு காவல் அதிகாரி (SDOP) தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார்.
- மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய சிறுவன், பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார். அப்போது டம்ளர் வெடித்து சிதறியதில், அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் குத்தியது.
இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோஹல்பூர் காவல் நிலைய அதிகாரி பிரதிக்ஷா மார்கோ தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக அப்பகுதி சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதை குழந்தைகள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த சோகமான விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
- வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்தது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியின் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
டி-20 உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த மந்திரி விஸ்வாஸ் கைலாஸ் சாரங் தனது காரின் மீது அமர்ந்தபடி கையில் தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மந்திரி தனது காரின் மீது அமர்ந்து கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு காட்சி அளிக்கிறார். அவரது உதவியாளர்கள் காரின் இருபுறமும் சாகசம் செய்தவாறு பயணம் செய்யும் காட்சிகளும் உள்ளது.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் மந்திரியின் இந்த செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். மந்திரியே இப்படி செய்தால், சாமானியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், இதுபோன்ற செயலை வேறு யாராவது செய்திருந்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் என கூறியுள்ளார். இதுபோன்று ஏராளமான பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
मध्य प्रदेश के खेल मंत्री का खेल pic.twitter.com/4M5ifes2tp
— Ranvijay Singh (@ranvijaylive) June 30, 2024
- உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
- முழு நாட்டையும் தனது குடும்பமாக கருதி, பிரதமர் மோடி பணியாற்றுகிறார்.
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
அதில், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அல்லது அவரது பெயரில் ஒரு மரத்தை நடுமாறு கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில்,
மூன்றாவது முறையாக பிரதமரான பின் பிரதமர் மோடி, 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சியை முதன்முறையாக நடத்தினார்.
முழு நாட்டையும் தனது குடும்பமாக கருதி, பிரதமர் மோடி பணியாற்றுகிறார். அவர் தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார். மேலும் எங்களை ஊக்குவிக்கிறார் என்று கூறினார்.
- கணவர்களை வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள்.
- என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது
மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள்.
மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.
- முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் தொகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து மரக்கட்டையால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் தாக்கப்படும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் பலரும் வீடியோ எடுப்பது பதிவாகியுள்ளது.
வீடியோ வைரலானத்தை அடுத்து, முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூரின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது.
- தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர்.
- தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சோம் டிஸ்டில்லரீஸ் & ப்ரூவரீஸ் என்பது பீர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஆர்டிடி (குடிக்கத் தயார்) பானங்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் ஐஎஸ்ஓ-சான்றளிக்கப்பட்ட குழுவாகும்.
பச்பன் பச்சாவ் அந்தோலன் (பிபிஏ) என்றும் அழைக்கப்படும் தன்னார்வ நடவடிக்கை சங்கத்துடன் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) இணைந்து சோம் என்கிற மதுபான ஆலையில் சோதனை மேற்கொண்டது.
என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு, மதுபான ஆலையில் இருந்து 58 குழந்தைகள், 19 பெண்கள் மற்றும் 39 ஆண் குழந்தைகளை மீட்டதாக பிபிஏ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் கூறுகையில், "கடுமையான ரசாயனங்கள் மற்றும் மதுவின் தயாரிப்பால் குழந்தைகளின் கைகளில் தீக்காயங்கள் உள்ளன. அவர்கள் தினசரி பள்ளி பேருந்தில் மதுபான உரிமையாளரால் அழைத்து செல்லப்படுகின்றனர். தினமும் 12- 14 மணிநேரம் வேலை செய்தனர்.
இதுகுறித்து 'எக்ஸ்' பதிவில், முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில்," தொழிற்சாலையில் நடந்த சோதனை தீவிரமான விஷயம். தொழிலாளர், கலால் மற்றும் காவல் துறைகளில் இருந்து விரிவான தகவல்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
- பசுவின் கொழுப்பு , தோல் மற்றும் எலும்புகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
- பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை சட்ட விரோதமாக இறைச்சிக்காக வளர்த்ததாக கூறி 11 இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மண்டலாவில் உள்ள பழங்குடியினப் பகுதியான பைன்வாகியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளில் சட்டவிரோதமாக சுமார் 150 பசுக்கள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அந்த வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் மாட்டிறைச்சி கண்டெடுக்கபட்டது. மேலும் பசுவின் கொழுப்பு, தோல் மற்றும் எலும்புகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டது மாட்டிறைச்சிதான் என்று உறுதி செய்யப்பட்டதாலும் 11 பேரின் வீடுகளும் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததாலும் அவை இடித்து அகற்றப்பட்டன.
மேலும் அங்கிருந்த பசுக்களை மீட்ட போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்து ஒருவரை கைது செய்த நிலையில் மற்ற 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் இஸ்லாமியர்கள் என்றும் பைன்வாகி பகுதியில் சமீப காலமாக பசு கடத்தல் அதிக அளவில் நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மத்தியப் பிரதேசத்தில் பசுக்களை கடத்தி இறைச்சிக்காக வதைக்கும் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- பாலக் முச்சலும் அவரது சகோதரரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது.
பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல், 'சேவிங் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற நிதி திரட்டும் அமைப்பின் மூலம் இதய நோய்களுடன் போராடும் 3000 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக 32 வயதான பாலக் முச்சல் கூறும்போது, இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறேன். இன்னும் 413 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தற்போது இதுதான் எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியம் என பாலக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் தெருக்களில் பாடி நன்கொடைகளை சேகரித்து கார்கில் வீரர்களுக்காக நிதி திரட்டிய தனது முதல் அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
சமீபத்தில், இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த அலோக் என்ற சிறுவனின் வீடியோவைப் பகிர்ந்து, ஆதரவு அளித்தவர்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றது.
பாடகரும் பாடலாசிரியருமான பாலக் முச்சல் இதயக் கோளாறினால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் பொருட்டு அவர் மற்றும் அவரது சகோதரர் பாலாஷ் முச்சால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றி வரும் பாலக் முச்சல் சமூக செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா சாதனை புத்தகம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளார். அவரது பணியை மத்திய அரசு மற்றும் பிற பொது நிறுவனங்கள் பல்வேறு விருதுகளை வழங்கி அங்கீகரித்துள்ளன.
"ஏக் தா டைகர்" (2012), "ஆஷிக் 2" (2013)," கிக் (2014), "ஆக்சன் ஜாக்சன்" (2014) "மெய்மறந்தேன் பாராயோ" (2015) "எம். எஸ். தோனி" (2016) மற்றும் காபில் (2017) போன்ற படங்களில் பாலக் முச்சல் பணியாற்றியுள்ளார்.
பாலக் முச்சலின் பயணம் இரக்கத்தின் சக்திக்கு ஒரு சான்றாகும், மேலும் தனிநபர்கள் தங்கள் திறமைகளை மற்றவர்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தும்போது அவர்கள் ஏற்படுத்தும் ஆழமான தாக்கம். தன் இடைவிடாத முயற்சியின் மூலம், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், மற்றவர்களை இந்த உன்னதமான காரியத்தில் சேர ஊக்குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- வால்மிக் கோல் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.
- மாமியார் சரோஜ் கோலைக் கொன்றதற்காக காஞ்சன் கோல் குற்றவாளி.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது பெண்ணுக்கு அம்மாநில நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பின்போது, ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி பத்மா ஜாதவ், "தனது 50 வயது மாமியார் சரோஜ் கோலைக் கொன்றதற்காக காஞ்சன் கோல் குற்றவாளி" என்று தீர்ப்பளித்துள்ளார்.
மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தில் வசிக்கும் காஞ்சன், குடும்பத் தகராறை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி அன்று தனது மாமியார் சரோஜ் கோலை அரிவாளால் 95 முறை குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
அப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனியாக கிடந்த சரோஜை, அவரது மகன் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சரோஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வால்மிக் கோல் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோலும், மருமகளை கொலை செய்ய தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டார்.
ஆனால் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.
- நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணிளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
- மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 9) இரவு 7.15 மணியளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றுள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 72 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ராஜ்நாத் சிங், ஜே.பி நட்டா, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் மோடி மீண்டும் பிரதமரான குஷியில் நாடு முழுவதும் பாஜகவினர் வெற்றிகொண்டாட்டத்தில் ஆரவாரித்து வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பாஜக கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அலுவலகத்தின் மேல் தலத்தில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்த தீயணைப்புத் துறை போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்