search icon
என் மலர்tooltip icon

    இந்தோனேசியா

    • குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
    • இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

    ஜகார்த்தா:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அங்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    மேலும், தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    • இந்தோனேசியாவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.
    • இதில் ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிதி மந்திரிகள் பங்கேற்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தோனேசியா, ரஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின்நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாட்டில் ரஷியா பங்கேற்பது அபத்தமானது என கனடா மந்திரி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் ரஷியாவின் பங்கேற்பு அபத்தமானது.

    இந்தக் கூட்டத்தில் ரஷியா பங்கேற்றது தீயணைப்பு வீரர்களின் கூட்டத்திற்கு தீ வைப்பவர்களை அழைப்பது போல் இருந்தது.

    உக்ரைனின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் அதன் பொருளாதார விளைவுகளுக்கு ரஷியா நேரடியாகவும் முழு பொறுப்பாகவும் உள்ளது என தெரிவித்தார்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் அரையிறுதியில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார்.
    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் சீன வீரர் சாவோ ஜென் பெங்குடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சீன வீரர் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் பிரனோய் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் ஹாங்காங் வீரரை 2வது சுற்றில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    • இந்தியாவின் சார்பில் பிரனோய் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

    • இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை முதல் சுற்றில் வீழ்த்தினார்
    • இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறினார்

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய், சக வீரரான லக்சயா சென்னை வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டியில் எச்.எஸ்.பிரனோய், ஹாங்காங் வீரர் ஹா லோங் அன்ஹுஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரனோய் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்ற வீரர்கள் தோல்வியடைந்த நிலையில் பிரனோய் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    காலிறுதியில் டென்மார்க் வீரர் ராஸ்மஸ் ஜெம்கேயுடன், பிரனோய் மோத உள்ளார்.

    • இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க் வீரருடனான போட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
    • இந்தியாவின் பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனையிடம் தொற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌சயா சென், டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உலகின் 4ம் நிலை வீரரான சௌ தியென் சென்-னை லக்‌சயா சென் எதிர்கொண்டார். இந்த போட்டியில் லக்‌சயா சென் 16-21, 21- 12, 14-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானன் ஆகியோர் மோதினர். இதில் பி.வி.சிந்து 12- 21, 10-21 என்ற நேற் செட்களில் தோல்வி அடைந்தார்.

    ×