என் மலர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
- முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது.
- வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு குற்றால தீர்த்தம் பவனி வருதல் நடைபெறும்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நாளை காலை 9 மணிக்கு அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மாகாப்பு சிறப்பு அலங்காரம், தீபாராதனை அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு முப்புடாதி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, பஞ்சமுக தீபாராதனை நடக்கிறது.
வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு குற்றால தீர்த்தம் பவனி வருதல், பகல் 11 மணிக்கு சிறப்பு ஹோமங்களுடன் அபிஷேகம், சந்தன காப்பு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். மாலை 6 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி, இரவு 12 மணிக்கு சாம பூஜை, பஞ்சமுக தீபாராதனை நடைபெறும். 28-ந்தேதி (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு பொங்கல் வழிபாடு, பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா தீர்த்தவாரி நடைபெறுகிறது.