search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் 170 மி.மீ. மழை பதிவு: கொடைக்கானல் ஏரிச்சாலையில் முறிந்து விழுந்த மரம்
    X

    கொடைக்கானல் ஏரிச்சாலையில் முறிந்து விழுந்த மரம்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 170 மி.மீ. மழை பதிவு: கொடைக்கானல் ஏரிச்சாலையில் முறிந்து விழுந்த மரம்

    • திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சாலையில் கழிவுகளோடு மழை நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
    • ஏரிச்சாலை கீழ்பூமி பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. பொதுமக்கள் அவ்வழியாக செல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்ட ன்சத்திரம், வேட சந்தூர், வடமதுரை, அய்யலூர், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சாலையில் கழிவுகளோடு மழை நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். கொ டைக்கானலில் விடுமுறை யை கொண்டாட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப ட்டுள்ளது. சுற்றுலா பயணிகளும் அறைகளி லேயே முடங்கி யதால் சாலைகள் வெறி ச்சோடி காண ப்பட்டது.

    கன மழை காரணமாக ஏரிச்சாலை கீழ்பூமி பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது பொதுமக்கள் அவ்வழியாக செல்லாததால் பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து அறிந்தும் ஊழியர்கள் விரைந்து வந்து மரத்தை அகற்றினர். அதன்பின்னர் போக்குவ ரத்து சீரானது.

    திண்டுக்கல் 5.2, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 41, பழனி 4, சத்திரப்பட்டி 17.6, நத்தம் 9, நிலக்கோட்டை 30, வேடசந்தூர் 10, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 10, காமாட்சிபுரம் 12.2, கொடைக்கானல் பூங்கா 31.2 என மொத்தம் மாவட்ட த்தில் 170.20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×