search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த போலீஸ்காரர்கள்
    X
    ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த போலீஸ்காரர்கள்

    ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த போலீஸ்காரர்கள்

    ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    பண்ருட்டி:

    சென்னை எழும்பூரில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடியை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இதனால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த ரெயிலில் சென்னை பெரம்பூரை சேர்ந்த போலீஸ்காரர் மாணிக்கராஜ் (வயது 40), சென்னை திருமுல்லைவாயல் போலீஸ்காரர் முருகன்(37), சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்குமார் (39), திருவள்ளூரை சேர்ந்த பொன்னுசாமி (40), முத்துக்குமார் ஆகியோர் தாம்பரம் பகுதியில் இருந்து வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.

    தாம்பரத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட நேரம் முதல் 5 பேரும் குடிபோதையில் பேசிக்கொண்டே இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. ஆத்திரம் அடைந்த பயணிகள் இதனை தட்டிக்கேட்டனர். உடனே போதையில் இருந்த 5 பேரும் பயணிகளிடம் ரகளை செய்தனர். மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் 5 பேரும் கேட்கவில்லை.

    இந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே ரெயிலில் இருந்த பயணிகள் இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசார் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    உடனே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது. பின்னர் 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    Next Story
    ×