search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிறது டிரைவரே இல்லாத மெட்ரோ ரெயில்கள்.... அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்
    X

    வருகிறது டிரைவரே இல்லாத மெட்ரோ ரெயில்கள்.... அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்

    • சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் சென்னை மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக சுரங்கப்பாதைகள், உயர்மட்ட பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு முதல் 2-ம் கட்ட மெட்ரோ ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.


    2-ம் கட்ட திட்டத்துக்கான டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் டெப்போவிடம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு ரெயில் அடுத்த மாதம் வர உள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி ஆலையில் நடந்து வருகிறது.

    டிரைவர் இல்லாத மேலும் 9 ரெயில்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வர உள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர்களுடன் கூடிய 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத 3 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் தேவையை பொருத்து அது 6 பெட்டிகளை கொண்டதாக மாற்றப்படும்.

    டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதுவரை 50 சதவீத சோதனைகள் முடிந்துள்ளன. ரெயிலை இயக்கும் போது எந்த பிரச்சினையும் எழவில்லை.

    நாங்கள் ரெயில்களின் அனைத்து பாகங்களையும் சரிபார்த்து வருகிறோம். ரெயிலின் வேகம், அது எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து இந்த மாத இறுதியில் சோதனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×