என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
- லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடும் மீண்டும் நேற்று முன்தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் வசிக்கும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடும் மீண்டும் நேற்று முன்தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஆதவ் அர்ஜூனா வீட்டில் நேற்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது இல்லத்தில் அமலாக்கத்துறையின் சார்பாகக் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனை குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது.
அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன்.
தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலோ, அது சார்ந்த பொறுப்பிலோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல. அமலாக்கத்துறையின் சோதனை ஆணை (SEARCH ORDER)எனது பெயரில் இல்லை என்பதையும், அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகார்களும், வழக்குகளும் இல்லை என்பதையும் ஊடகங்களுக்கும், தோழர்களுக்கும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எக்காலத்திலும் சட்டத்திற்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அந்தவகையில் இச்சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் சட்டரீதியாக அளிக்கப்பட்டு சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த சோதனை குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பத்திரிக்கையாளர் அல்லாத நபர்கள். அதிகார வர்க்கத்திற்கு விலைபோனவர்கள் மற்றும் சித்தாந்த ரீதியாக எங்களுடன் முரண்பட்டவர்கள் மூலம் எனக்கு எதிரான அவதூறான கட்டுக்கதைகளும், உண்மைக்கு மாறான தகவல்களும் கடந்த இரண்டு நாட்களாகப் பரப்பப்பட்டு வருகிறது.
அரசியல் அறிவியல் மாணவனாக பதினைந்து வயதிலே சமத்துவ சித்தாந்த கருத்தியலில் பயணிக்கத் துவங்கியவன் நான். அந்த பயணத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் யுத்த களத்தில், தேர்தல் வியூக வகுப்பாளராக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காகவும், மக்களுக்கான அரசை உருவாக்கவும் களப்பணியாற்றியுள்ளேன்.
அந்த பயணத்தின் நீட்சியாக இப்போது நேரடி அரசியலிலும் களமிறங்கியுள்ள எனக்கு இது போன்றவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் எனது அரசியல் சிந்தனைக்கு மேலும் உத்வேகம் அளிக்குமே தவிர, ஒருபோதும் எனது அரசியல் பயணத்திற்குத் தடையாக மாறாது.
என் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழியில் மத பெரும்பான்மைவாதம், சாதிய ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக, தனிமனித சுதந்திரம், சமூக நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் உள்ளிட்டவற்றிற்கான எனது பிரச்சாரப் பயணத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் தேர்தல் அரசியலில் பேரறிஞர் அண்ணா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் கொண்ட கொள்கைகளில் கவனம் சிதறாமல் வெற்றி பெற்றகை போல பதிய அரசியல் பாகையை உருவாக்குவோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம்.
- எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்.பி., சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது.
மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது.மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராகவள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்.#Anti_Saffronisation… pic.twitter.com/16zpYYWQcC
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 16, 2024
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுதினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19, 20, 21, 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள மற்றும் தெற்கு கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது.
- இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னையை அடுத்த குன்றத்தூர் மணஞ்சேரி தேவேந்திரன் நகர் பகுதியில் எலி மருந்தில் இருந்து வெளியேறிய கடுமையான நெடி காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தற்கொலைகளை தடுப்பதற்காக ஏற்கனவே சில மருந்துகளை அரசு தடை செய்துள்ளது. இந்த சம்பவத்திலும் குறிப்பிட்ட எலி மருந்து தடை செய்யப்பட்டதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்றைய கல்வி முறையில் நாம் பாரதம் என்றால் என்ன என்று நம் குழந்தைகளுக்கு சொல்வது இல்லை.
- மதங்கள் அனைத்தும் சமம் என சொல்வது அரசியல் வாதம்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒப்பிட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. இதில் திருவள்ளுவர் கபீர், தாசர் வேமனா ஆகிய மூவரின் மொழியியல் மற்றும் இலக்கிய திறன் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த 2 நாட்கள் அறிவுசார் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் வெவ்வேறு இடத்தில் இவர்கள் பிறந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையை இவர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்திய இலக்கியங்களை எந்த மொழியில் படித்தாலும் சில ஒற்றுமைகள் இருக்கும். எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும் என்பதை கோடிட்டு காட்டப்பட்டிருக்கும்.
இன்றைய கல்வி முறையில் நாம் பாரதம் என்றால் என்ன என்று நம் குழந்தைகளுக்கு சொல்வது இல்லை. இந்தியாவை தான் சொல்லி தருகிறோம். பாரதம் என்பது இந்தியாவை விட பெரியது. பாரதம் என்பது பொலிட்டிகள் ஸ்டேட் அல்ல. ஐரோப்பிய வகைப்படுத்துதலே பொலிட்டிகள் ஸ்டேட். பாரதம் அதை விட பெரியது.
பாரதம் இந்தியாவை விட பழமையானது. பாரத் என்று அழைக்கும் போது அரசியல் நாடு இல்லை. ஆனால் இந்தியா என்று அழைக்கும்போது பொது அரசியல் இருக்கிறது. ஒரு மரத்தின் இரு இலைகள் ஒன்று போல் இருப்பது இல்லை. ஆனால் அது வேறு வேறானவை அல்ல. அது போல பாரதம் என்பது பிரிக்க முடியாதது. ஆனால் வேறு வேறானவை. ஆனால் ஒன்றானது அதனை பிரிக்க முடியாது.
பாரதம் என்பது மதத்தின் அடிப்படையிலானது இல்லை. தர்மத்தின் அடிப்படையிலானது. மதங்கள் அனைத்தும் சமம் என சொல்வது அரசியல் வாதம். ஒவ்வொரு மதங்களும் வெவ்வேறு கூறுகள் கொண்டவை. தர்மம் தான் அனைத்தையும் இணைப்பது.
பாரதம் என்றால் சாதி, மதம் இல்லை. பாரதம் என்பது தார்மீக தர்ம நாடு. நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்பதே பாரதம். இந்த ஒற்றுமையை இந்த மூன்று புலவர்களும் சொல்லி உள்ளதை பார்க்க முடிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க. 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.
- அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
சென்னை:
சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று விளையாடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக பேட்மிட்டன் சங்க தலைவராக 7 ஆண்டுகள் இருக்கிறேன். நான் வருவதற்கு முன்பு சிபாரிசு மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் வந்த பிறகு திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெளிப்படையாக வீரர்களின் திறமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இன்று சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தமிழக வீரர்கள் உள்ளனர்.
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளது. 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். சென்னையின் நிலைமை மாறவில்லை.
தி.மு.க. 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.
அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மருத்துவர்களின் சேவை மக்களை காப்பது தான். சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லா மருத்துவர்களும் நினைப்பார்கள். அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்பது தவறு.
தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த கூட்டணியில் பா.ம.க. இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமண விழா நாளை காலை 9 மணிக்கு வடசென்னை சுங்கச்சாவடியில் உள்ள தங்கம் மாளிகையில் நடைபெறுகிறது.
- திருமண விழாவில் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
சென்னை:
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமண விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு வடசென்னை சுங்கச்சாவடியில் உள்ள தங்கம் மாளிகையில் நடைபெறுகிறது.
48 ஜோடிகளின் மண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைக்கிறார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்து கூறுகிறார். திருமண விழாவில் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெயதாஸ் பாண்டியன், சுரேஷ், செந்தில் குமார், ஜெயராமன், முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அமைச்சர்கள் பொன்முடி, பி.கே. சேகர்பாபு, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.எல்.ஏ.க்கள், ஜே.ஜே. எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விழாவில் நிர்வாகிகள் இளைய அருணா, மனோகரன், இரா.கருணாநிதி, மதிவாணன், மருதுகணேசன், நரேந்திரன், வெற்றி வீரன், எஸ்.ஆர்.கமலக்கண்ணன், கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் வட்ட செயலாளர் என்.எம். கதிரேசன் நன்றி கூறுகிறார்.
- தி.மு.க. அரசின் இதுபோன்ற நடவடிக்கை ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
- தி.மு.க. அரசின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம், வழிகாட்டி மதிப்பு, பதிவுக் கட்டணம், வாகன வரி, முத்திரைத்தாள் கட்டண உயர்வு என மாநில அரசின் பல வரி உயர்வுகளால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், டீசல் மீதான கூடுதல் வரி என்பது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகுக்கும். மத்திய அரசு விதிக்கும் கூடுதல் வரியை எதிர்க்கும் தி.மு.க., மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று கோருகின்ற தி.மு.க., தற்போது தமிழ்நாட்டில் டீசல் மீதான கூடுதல் வரியை உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம்?
தி.மு.க. அரசின் இதுபோன்ற நடவடிக்கை சாமானிய மக்களை வெகுவாக பாதிப்பதோடு, ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய் அளவுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும். தி.மு.க. அரசின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற வரி விதிப்பு தி.மு.க. ஆட்சியை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும். முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா.
- இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 15.11.2024 முதல் 26.12.2024 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா 30.12.2024 முதல் 19.01.2025 வரையும் நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மையம் 24.01.2025 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்களான 044-28339999 மற்றும் 1800 425 1757-ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் ( 044-28339999)
— TN HRCE (@tnhrcedept) November 15, 2024
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் தகவல்.@mkstalin @PKSekarbabu @tntourismoffcl @TNDIPRNEWS #cmmkstalin | #dycmudhay |… pic.twitter.com/3wapV3Vq0Y
- உண்மையையும் பொறுப்புணர்வையும் உயர்த்திப் பிடிக்கும் ஊடகவியலாளர்களின் இடையறாத முயற்சிகளைப் போற்றுகிறோம்.
- விருப்பு, வெறுப்பு பீடிக்காமல் ஊடகவியல் விளங்க வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசிய பத்திரிகை நாளில், உண்மையையும் பொறுப்புணர்வையும் உயர்த்திப் பிடிக்கும் ஊடகவியலாளர்களின் இடையறாத முயற்சிகளைப் போற்றுகிறோம்.
சகிப்பின்மை உயர்ந்து வரும் இக்காலத்தில், அவர்கள் காட்டும் நெஞ்சுரம்தான் மக்களாட்சியைக் காக்கும் இறுதி அரணாகத் திகழ்கிறது. விருப்பு, வெறுப்பு பீடிக்காமல் ஊடகவியல் விளங்க வேண்டும். அவ்வாறு விளங்கி, நமது மக்களாட்சியைக் காக்கும் குரல்களைக் காக்க உறுதியாகத் துணைநிற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.
- ஆந்திராவில் கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 3-ந்தேதி பிராமணர் சமுதாயத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.
நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ், தெலுங்கு மக்களிடையே வன்முறையை ஏற்படுத்த காத்திருக்கும் வெடிகுண்டு போல நடிகை கஸ்தூரி பேசியுள்ளார் என்று கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.
இந்நிலையில் ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆந்திராவில் கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி, வீடு முழுவதும் பரவியுள்ளது.
- சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
சென்னை குன்றத்தூரில் வசிப்பவர் கிரிதரன். இவர் தனது மனைவி பவித்ரா மற்றும் விஷாலினி (6 வயது), சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
அவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி, வீடு முழுவதும் பரவியுள்ளது. இதனை சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கிரிதரன், பவித்ரா இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த Pest Control நிறுவனம் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து வேளாண்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்