என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அந்த மாதம் 24-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் கடந்த அக்டோபர் மாதம் தங்கம் இருந்த நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தையும் தாண்டியது. அடுத்த 3 நாட்களில் ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற உச்சத்தையும் தொட்டது.
அதன் பிறகும் விலை குறைந்தபாடில்லை. மேலும் அதிகரித்தே காணப்பட்டு, கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரம் என்ற வரலாறு காணாத உச்சத்தையும் எட்டியது.
இப்படியே நீடித்தால் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தையும் கடந்துவிடும் என்றே சொல்லப்பட்டது. விலை உயர்வு பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்தது. எப்போதுதான் விலை குறையும்? என்ற எதிர்பார்ப்பையும் கொடுத்தது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2-ந்தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு எதிரொலியால் கடந்த 7-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது.
அதற்கு மறுநாள் விலை மீண்டும் அதிகரித்து, அவ்வளவுதானா விலை குறைவு என நினைக்க வைத்தது. ஆனால் அதன் பிறகு விலை 'மளமள'வென சரிந்து வருவதை பார்க்க முடிகிறது.
எந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததோ, அந்த அளவுக்கு குறைந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில், தொடர்ந்து விலை இறங்குமுகத்தில் காணப்பட்டு நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.55 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,935-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,560
14-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 55,480
13-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,360
12-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,680
11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-11-2024- ஒரு கிராம் ரூ. 99
14-11-2024- ஒரு கிராம் ரூ. 99
13-11-2024- ஒரு கிராம் ரூ. 101
12-11-2024- ஒரு கிராம் ரூ. 100
11-11-2024- ஒரு கிராம் ரூ. 102
- கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி. எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும்.
- தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், குரூப்-1, 2, 2ஏ, 4, 5 என பல்வேறு பதவிகளுக்கு போட்டித் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்புகள், எழுதிய தேர்வுகளின் முடிவுகள் https://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்திலும் வெளியாகிறது.
இதன் மூலம் தேர்வர்கள் பார்த்து அறிந்து கொள்கின்றனர். இந்த நிலையில் தற்போது டெலிகிராம் சேனல் பக்கத்திலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடங்கி உள்ளது.
இந்த பக்கத்தில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ள https://x.com/TNPSC-Office என்ற எக்ஸ் தளப்பக்கத்துக்கு சென்று அதில் டெலிகிராம் சேனல் தொடங்கப்பட்டது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், டி.என்.பி. எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும். அதில் தேர்வர்கள் தங்களை இணைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் தேர்வுகள், தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து உள்ளது.
- சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுரேஷ் சங்கையா சிகிச்சை பெற்று வந்தார்.
- யோகி பாபு நடிப்பில் 'கெனத்த காணோம்' என்ற படம் சுரேஷ் சங்கையா இயக்கி வந்தார்.
ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவால் காலமானார்
கல்லீரல் பாதிப்பு தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சங்கையா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது யோகி பாபு நடிப்பில் 'கெனத்த காணோம்' என்ற புதிய படத்தை சுரேஷ் சங்கையா இயக்கி வந்தார். இப்படம் விரைவில் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
- மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் ரெயில்கள் அட்டவணைப்படி இயங்கும்.
சென்னை:
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே நாளை புறநகர் ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லாவரம்-கடற்கரை இடையே பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரெயில்கள் அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
எனவே பயணிகள் அதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிடவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
- குழந்தையின் பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை குன்றத்தூரில் வசிப்பவர் கிரிதரன். இவர் தனது மனைவி பவித்ரா மற்றும் விஷாலினி (6 வயது), சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
அவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள் வைக்கப்பட்ட எலி மருந்தின் நெடி, வீடு முழுவதும் பரவியுள்ளது. இதனை சுவாசித்த நால்வருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், 2 குழந்தைகள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எலியை கட்டுப்படுத்த மருந்து வைத்த Pest Control நிறுவனம் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கிரிதரன், பவித்ரா இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர்கள் இருவரும் மேலும் இரண்டு நாட்களுக்கு ஐசியுவில் கண்காணிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
- வழக்கை ரத்து செய்யக் கோரி சி.வி. சன்முகம் மனு தாக்கல்.
மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சன்முகம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளது.
மனுதாரர் சி.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர். முன்னாள் அமைச்சர் என்பதால் பொறுப்புடன் பேச வேண்டும். ஆளும் கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடன், எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.
சென்னை விமான நிலையத்தில் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் பத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியுற்றனர். சென்னையில் இருந்து கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருவனந்தபுரம், சிலிகுரி செல்ல இருந்த 5 புறப்பாடு விமானங்களும் ஐந்து இடங்களில் இருந்து சென்னை வர இருந்த வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்து சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கவுண்டர்களில் பயணிகள் தகவல் கேட்டுள்ளனர். எனினும், விமான நிறுவனம் சார்பில் எந்தவித முறையான பதில் வழங்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
- அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தின் மிகப்பெரிய சேவை நிறுவனமாகும்.
- பண்டிகைகள் போன்றவற்றிற்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றன.
சென்னை:
தனியார் பஸ்களை பயன்படுத்தியதால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ. டி.யு.) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழகத்தின் மிகப்பெரிய சேவை நிறுவனமாகும். தினமும் 1.75 கோடி மக்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள், பருவகால நிகழ்வுகள். பண்டிகைகள் போன்றவற்றிற்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகின்றன.
ஆனால், நீண்டகாலமாக உள்ள இரு நடைமுறை சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது. ஆயுதபூஜை மற்றும் தீபாவளியையொட்டி சிறப்பு இயக்கத்திற்கு தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் சரியற்றது. தனியார் பஸ்களை வாடகைக்கு எடுப்பதற்கு கீழ்கண்ட இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டது:
1. போக்குவரத்து பஸ்கள் சிறப்பு இயக்கத்திற்கு பயன்படுத்தினால் 1 கிலோ மீட்டருக்கு ரூ.90 வரை செலவாகும். தனியார் பஸ்சை இயக்கும்போது கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா மட்டும் கொடுத்தால் போதும். இதனால் இழப்பு தவிர்க்கப்படும்.
2. சிறப்பு இயக்கத்தையொட்டி பஸ்களின் வழித்தடத்தை மாற்றி இயக்கும் போது அன்றாடம் உபயோகிக்கும் பயணிகள் பாதிக்கப்படுவர்.
மேற்கண்ட இரண்டு காரணங்களும் சரியற்றது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
அரசு பஸ்களை இயக்கினால் ரூ.90 செலவாகும் என்பது சரியற்றது.
தற்போது பல கழகங்களில் கிலோ மீட்டருக்கான இயக்க செலவு ரூ.65 மட்டுமே செலவாகிறது. வாதத்திற்காக ரூ.90 செலவாகும் என்று எடுத்துக் கொண்டாலும், பஸ் இயக்கத்தில் மாறும் செலவீனம் நிரந்தர செல்வீனம் என்ற 2 வகையான செலவீனங்களும் உள்ளது.
தனியார் பஸ்களை இயக்கினாலும் நிரந்தர செலவீனத்தில் எவ்வித மாறுபாடும் ஏற்படாது மாறும் செலவீனம் மட்டுமே மிச்சமாகும் மாறும் செலவீனம் தற்போது கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.18 ஆகிறது தனியார் பஸ்கள் இயக்குவதால் ரூ.18 மட்டுமே மிச்சமாகும் அதேசமயம், சிறப்பு இயக்கத்தின் மூலம் 1 கிலோ மீட்டருக்கு ரூ.30-க்கு மேல் வருவாய் வரும். எனவே, சிறப்பு இயக்கம் இயக்குவதன் மூலம் 1 கிலோ மீட்டருக்கு ரூ.12 கழகத்திற்கு வருவாய் கிடைக்கும் இவ்வாறு வருவாய் கிடைப்பதை தவிர்த்துவிட்டு, தனியார் பஸ்களை இயக்கியதன் மூலம் சுமார் ரூ.50 கோடி கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நீதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்து கழகங்கள் தேவையற்ற முறையில் ரூ.50 கோடி இழப்பு ஏற்படுவது எவ்விதத்திலும் நியாய மற்றது.
போக்குவரத்து கழகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ஒரு நாளில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம் பேர். தற்போது பயணம் செய்பவர்கள் கோடியே 75 லட்சம் பேர். 2 கோடிக்கு மேற்பட்ட பயணிகளை அன்றாடம் கையாண்ட போக்குவரத்து கழகங்களால் 1 கோடியே 75 லட்சம் பயணிகளை கையாள முடியாது என கூறுவதே சரியற்றது.
எனவே. மேலே கூறியு உள்ள விஷயங்களைப் பரிசீலித்து தமிழகத்தின் சிறப்புக்குரிய பொதுத்துறை நிறுவனமான போக்கு வரத்துக் கழகங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- முன்னதாக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கினார்.
கட்சி கொள்கைகள், திட்டங்கள் பற்றி அறிக்கை வெளியிட்ட விஜய், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு. முன்னதாக கட்சியின் ஆரம்ப கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்தார்.
விஜய்யின் அறிவிப்பு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற தொடங்கியது.
புதிய உறுப்பினர்கள் சேர்க்க தொடங்கிய சில தினங்களிலேயே லட்சக்கணக்கானோர் கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக சேர தொடங்கினர். கட்சியில் இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகமாக சேர்ந்தனர்.
ஒரே நாளில் ஒன்று போல் கட்சியில் இணைவதற்கு முயற்சிப்பதால் இணைய தள சர்வர் முடங்கியது.
இதையடுத்து சில நாட்கள் உறுப்பினர்கள் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சர்வர் சரி செய்யப்பட்டு உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது.
இதையடுத்து கட்சியில் சேர்ந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை அடைந்தது.
இந்த நிலையில் கட்சி தலைவர் விஜய் கட்சி கொடியை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து விக்கிரவாண்டி வி.சாலை என்ற இடத்தில் கடந்த 27-ந்தேதி மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.
மாநாட்டில் விஜய்யின் அதிரடி பேச்சு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பொது மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து கட்சியில் புதிதாக சேர்வதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டி கட்சியில் இணைய தொடங்கினர். இதையடுத்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிகை 93 லட்சத்தை அடைந்தது.
இந்த நிலையில் ஒரே நாளில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால் மீண்டும் தமிழகம் முழுவதும் 'சர்வர்' முடங்கியது. இதனால் உறுப்பினர் சேர்க்கை பணியில் தடை ஏற்பட்டது.
இதையொட்டி படிப்படியாக இணைய தள செயலியின் சர்வர் சரி செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் பலர் புதிதாக இணைய தொடங்கினர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக சேர்ந்தோர் எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் 1 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் கட்சி தொடங்கி சில மாதங்களில் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடி நெருங்கி இருப்பது தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய வரிகள் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும், இந்த கோரிக்கையை நிறைவேற்றாது தி.மு.க. அரசு காலத்தைக் கடத்துவதைப் பார்த்தால், இந்த கோரிக்கை நிறைவேறாதோ என்ற அச்சம் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்பதற்கேற்ப அ.தி.மு.க. ஆட்சியின் மீது பழிபோடாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். எதுவும் சாத்தியம்.
- நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து புரிதல் இல்லாததால் தான் அவற்றை வேண்டாம் என விஜய் பேசி உள்ளார்.
நடிகரும் மூத்த அரசியல்வாதியுமான சரத்குமார் கூறியதாவது:
* விஜய் கூறியது போல் நானும் உச்சநடிகராக இருக்கும் பொழுது தான் அரசியலுக்கு வந்தேன்.
* மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு வந்தேன். மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தேன். எதுவும் சாத்தியம்.
* நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து புரிதல் இல்லாததால் தான் அவற்றை வேண்டாம் என விஜய் பேசி உள்ளார்.
* அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்த விஜய் அரசியல் சாசனத்தில் உள்ள கவர்னர் பதவியை எப்படி வேண்டாம் என சொல்கிறார் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்