search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கங்கைகொண்டான் சிப்காட்டில்  உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை வழங்ககோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரை படத்தில் காணலாம்.

    கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ளூர் வாலிபர்களுக்கு வேலை வழங்ககோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

    • சிப்காட் தொழில் பேட்டை போன்ற இடங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அல்லாமல் வட மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேலுஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாச்சலபதி என்ற குட்டி, நாகராஜன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், உள்ளூர் பகுதி இளைஞர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடந்த ஜாதிய ரீதியிலான கலவரங்கள் மற்றும் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக, மறைந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது.

    சிப்காட் தொழில் பேட்டை

    அவரால் வழங்கப்பட்ட அறிக்கையில் தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியிலான மோதல்களை தடுக்க வேலை வாய்ப்பு இல்லாத காரணம் என அதில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டை, நாங்குநேரி பொருளாதார மண்டலம் போன்றவைகள் உருவாக்கப்பட்டது.

    இந்நிலையில் சிப்காட் தொழில் பேட்டை போன்ற இடங்களில் உள்ளூர் வாசிகளுக்கு அல்லாமல் வட மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

    இதனை தடுத்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் தாழையூத்து பஜார் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேலுஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் வெங்கடாச்சலபதி என்ற குட்டி, நாகராஜன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், உள்ளூர் பகுதி இளைஞர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். உள்ளூர்வாசி களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×