search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்த தருமபுரி எம்.எல்.ஏ.
    X

    பாகலஹள்ளி பகுதியில் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்,எம்.எல்.ஏ. தூய்மை பணியில் ஈடுபட்ட காட்சி.

    வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்த தருமபுரி எம்.எல்.ஏ.

    • தருமபுரி எம்.எல்.ஏ வீடு வீடாக சென்று கும்பைகளை சேகரித்தார்.
    • தூய்மை இந்தியா திட்ட இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் தூய்மை இந்தியா இயக்கம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. காந்தியின் தூய்மையான பாரதம் தூய்மையான இந்தியா என அவரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டம் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்ந்து மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

    தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்று தூய்மை இந்தியா திட்டம் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள் ளப்பட்டன. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சியில் நேற்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தூய்மை இந்தியா திட்ட இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் பாகலஹள்ளி, கெங்களாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் தூய்மை பணிகளை மேற் கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் வீடு வீடாகச் சென்று ஊராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் குப்பைகளை சேகரித்தார். தூய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாறியதில் நாடு முழுவதும் மக்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தர்மபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏவும் தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் விதமாக பாகலஹள்ளி ஊராட்சி முழுவதும் தூய்மைப் பணிகளை ஆர்வமுடன் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாகல ஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×