என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் தேங்காய் நார் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

- கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
- ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே இச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலை தொடங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தற்காலிகமாக தொழிற்சாலை மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் ஆர்.டி.ஓ.வுக்கு மாசு கட்டுப்பாட்டு ஆய்வு நடத்து வதற்கு மனு கொடுத்தார்கள்.
இதனையடுத்து ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் முன்னிலையில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தனபால் மற்றும் தேவராஜ் தலைமையிலான குழு தேங்காய் நார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆய்வின்போது கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் ஆய்வாளர் உஷாராணி மற்றும் வருவாய் துறையினர், இன்ஸ்பெக்டர்கள் ஜீவானந்தம், ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு பொதுமக்கள் இடையே ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் கூறுகையில், ஆய்வின் முடிவுகளை கலெக்டருக்கு அனுப்பப்படும். அவரது அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.